ஜெய்ப்பூர்: இந்தியாவில் இருந்திருந்தால் நோபல் பரிசு கிடைத்திருக்காது என்று அபிஜித் பானர்ஜி கூறி இருக்கிறார்.

மும்பையில் பிறந்த அபிஜித் பானர்ஜி கொல்கத்தா பல்கலைக்கழகம் மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றார். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி பெற்ற பின்னர், மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தில் (எம்ஐடி) பேராசிரியராக உள்ளார்.

2019ம் ஆண்டில், ஆல்பிரட் நோபலின் நினைவகத்தில் பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசை அவர் தனது மனைவி எஸ்தர் மற்றும் மைக்கேல் கிரெமருடன் பகிர்ந்து கொண்டார். உலகளாவிய வறுமையை ஒழிப்பதற்கான அவர்களின் சோதனை அணுகுமுறைக்காக அவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

இந் நிலையில், நோபல் பரிசு குறித்து அபிஜித் பானர்ஜி கூறியிருப்பதாவது: சொந்த நாட்டில் இருந்திருந்தால் நோபல் பரிசு வெல்ல முடியாது. இந்தியாவில் நல்ல திறமையாளர்கள் இல்லை என்று அர்ததம் அல்ல.

ஆனால் ஒரு நல்ல, குறிப்பிட்ட சிஸ்டம் இல்லை. தமக்கு நிறைய பேரின் ஆதரவு கிடைத்தது என்றார்.