விம்பிள்டன் டென்னிஸ் போட்டி: கரோலின் வொஜ்னியாகி அதிர்ச்சி தோல்வி

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் டென்மார்க்கை சேர்ந்த கரோலின் வொஜ்னியாகி இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டு அதிர்ச்சி தோல்வி அடைந்தார். விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் இங்கிலாந்தில் நடைபெற்று வருகின்றன. உலகளவில் தரவரிசை பட்டியலில் சிறந்து விளங்கிய கரோலின் வொஜ்னியாகி புதன் கிழமை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவில் ரஷ்யா வீராங்கனையிடம் தோற்றார்.
wozniacki
ரஷ்யாவை சேர்ந்த எகடெரினா மகரோவாவுடன் கரோலின் இரண்டாவது சுற்றில் வொஜ்னியாகி உடன் பலபரீட்சையில் ஈடுபட்டார். இதில் 6-4, 1-6, 7-5 என்ற புள்ளிகள் கணக்கில் கரோலினை ரஷ்யா வீராங்கனை வெற்றிக் கொண்டார். வொஜ்னியாகி தொடர்ந்து ஐந்து போட்டிகளில் விளையாடி அதிகளவில் புள்ளிகளை பெற்றிருந்தாலும், இந்த தோல்வி மூலம் பின்னுக்கு தள்ளப்பட்டு போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

ஜனவரி மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலியா ஓப்பன் டென்னிஸ் போட்டியில் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றிய 27 வயதான வீராங்கனைக்கு இந்த தோல்வி மிகப்பெரிய அதிர்ச்சியையும், கசப்பான ஒரு அனுபவத்தையுமே கொடுத்தது.