பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் தள்ளுபடி 7 மடங்கானது

டில்லி

டந்த 4 வருடங்களில் பொதுத்துறை வங்கிகள் தள்ளுபடி செய்துள்ள வாராக்கடன்கள் 7 மடங்காக அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

வங்கிகளில் வாராகடன்களின் எண்ணிக்கையும் தொகையும் அதிகரித்து வருகின்றன.   வங்கிகள் இவற்றை நான் பெர்ஃபார்மிங் அசெட்ஸ் என குறிப்பிடுகின்றனர்.   அதாவது பயன் தராத சொத்துக்கள் என்னும் இனத்தில் இவை வருகின்றன.     வங்கிகள் கருத்துப்படி அவைகள் வட்டி அளிக்காவிடினும் அந்த கடனுக்கான ஈட்டு சொத்துக்கள் இருக்கின்றன என்பதாகும்.

ஆனால் அதே நேரத்தில் பல வங்கிகள் வாராக்கடன்களை தள்ளுபடி செய்து விடுவது குறிப்பிடத்தக்கதாகும்.   தள்ளுபடி செய்யப்பட்ட வாராக்கடன்கள் என்பதால் வங்கிக்கு நஷ்டம் எற்பட மிகவும் வாய்ப்பு உண்டு.   இந்நிலையில் ரிசர்வ் வங்கி பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் தள்ளுபடி செய்யப்பட்ட வாராக்கடன்கள் குறித்த விவரத்தை வெளியிட்டுள்ளது.

இந்த விவரங்களின் படி கடந்த 2011ஆம் வருடம் வரை வங்கிகளின் சொத்துக்கள் அதிகரித்து வந்துள்ளன.   ஆனால் வாரக்கடன்களை பொறுத்த வரை 2014ஆம் வருடம் வரை ஓரளவு குறைந்தே காணப்பட்டுள்ளன.  அதன் பிறகு இந்த வாராக்கடன்கள் விரைவாக உயரத் தொடங்கி உள்ளன.   அதே போல் ஒரு குறிப்பிட்ட காலம் என இல்லாமல் இந்த வாராக்கடன்கள் தள்ளுபடியும் அதிகரித்துள்ளன.

கடந்த 214-15ல் வாராக்கடன்கள் 7.79% அதிகரித்துள்ளன.   அதற்கடுத்த வருடம் 10.41 % ஆக ஆகி உள்ளன.   கட்ந்த 2017 ஆம் வருட  இறுதியில்  வாராகடன்களின் தொகை ரூ.7.70 லட்சம் கோடியை எட்டி உள்ளது.  2014 ஆம் ஆண்டு இந்த தொகை ரூ.1.75 கோடியாக இருந்துள்ளன.

வங்கிகளின் வாராக்கடன் தள்ளுபடி சதவிகிதமும் இதே போல் அதிகரித்துள்ளன.   கணக்கு வருடம் 2017-18ல் இது ரூ.90000 கோடியை எட்டி உள்ளது.   இது கடந்த 4 வருடங்களில் 7 மடங்காக உயர்ந்துள்ளது.    இந்த தள்ளுபடி செய்யபட்ட கடன்கள் என்பது வசூலிக்க  முடியாத  அல்லது போதுமான அளவுக்கு சொத்துக்கள் ஈடு காட்டப்படாதவைகள் ஆகும்.