சென்னை

பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் சற்று முன்பு மறைந்தார்.

எழுத்தாளர் பாலகுமாரனுக்கு வயது 72. ஏற்கெனவே இவருக்கு இரு முறை இதயத்தில் பிரச்சினை இருந்தது.   இரு முறை பைபாஸ் சர்ஜரி செய்யப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் உடல் நலத்தில் பிரச்சினை ஏற்படவே சென்னை காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

சிகிச்சை பலனின்றி சற்று முன் இறந்தார். 1946ம் ஆண்டு . ஜுலை 5,ம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்தில் திருக்காட்டுப்பள்ளி வட்டத்தில் உள்ள பழமார்நேரிஎன்னும் சிற்றூரில் தமிழாசிரியர் சுலோசனா என்பவருக்கு மகனாகப் பிறந்தார். பதினொன்றாம் வகுப்பு வரை பயின்ற இவர். தட்டச்சும் சுருக்கெழுத்தும் கற்று தனியார் நிறுவனத்தில் 1969ஆம் ஆண்டில் சுருக்கெழுத்தராகப் பணியாற்றத் தொடங்கினார்.

அவ்வாண்டிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கினார். அவற்றுள் சில கணையாழி இதழில் வெளிவந்தன. பிறகு டிராக்டர் கம்பெனியில் உயர் அதிகாரியாக பணியாற்றினார். திரைத்துறையில் பணியாற்றுவதற்காக அப்பணியைத் துறந்தார். இவர் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 200-க்கும் மேற்பட்ட நெடுங்கதைகளையும் சில கவிதைகளையும் கட்டுரைகளையும் எழுதி உள்ளார்.

திரைப்பட இயக்குநர் பாலசந்தரின் குழுவில் மூன்று திரைப்படங்களிலும் கே. பாக்யராஜ்குழுவில் இணைந்து சில படங்களிலும் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். பின்னர் இது நம்ம ஆளு என்னும் திரைப்படத்தை கே. பாக்யராஜ் மேற்பார்வையில் இயக்கினார்.