எழுத்தாளர் பிரபஞ்சன் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம்!

மறைந்த எழுத்தாளர் பிரபஞ்சன் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட பிரபஞ்சன் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

தமிழுக்காக வாழ்ந்து இலக்கியத்துறையில் பணியாற்றி வந்த பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் புற்றுநோய் காரணமாக நேற்று முன் தினம் புதுச்சேரியில் காலமானார். அவரது உடலுக்கு அரசியல் தலைவர்களும், தமிழ் அறிஞர்களும், ஆர்வலர்களும், வாசகர்களும், திரைத்துறை பிரபலங்களும் அஞ்சலில் செலுத்தி வந்தனர். புதுச்சேரி முதல்வர் நாரயணசாமி நேரில் சென்று மலர் வளையம் வைத்து பிரபஞ்சன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

prabanjan

இதனை தொடர்ந்து அவரது இறுதி ஊர்வலம் இன்று மாலை புதுச்சேரியில் நடைபெற்றது. பிரபஞ்சனின் உடலுக்கு தேசியக்கொடி போர்த்தப்பட்டு ஊர்வலமாக எடுத்த செல்லப்பட்டது. அதன்பின்னர் சன்னியாசிதோப்பில் அவரது உடல் அரசு மரியாதையுடன், 21 குண்டுகள் முழங்க தகனம் செய்யபப்ட்டது.

புதுச்சேரியில் 1942ம் ஆண்டு பிறந்த சாரங்கபாணி வைத்தியலிங்கம் பள்ளிப்படிப்பை முடித்து கரந்தை கல்லூரியில் தமிழ் வித்வான் பட்டம் பெற்றார். அதன்பின்னர் தஞ்சையில் ஆசிரியராக பணியை தொடங்கிய வைத்தியலிங்கம் தனது பெயரை பிரபஞ்சன் என மாற்றிக்கொண்டு வாரப்பத்திரிகையில் பணியாற்ற தொடங்கினார்.

தமிழை நேசித்த பிரபஞ்சன் இலக்கியத்துறையில் கிட்டத்தட்ட 57 ஆண்டுகள் பணியாற்றி வந்துள்ளார். இவர் மொத்தம் 46 புத்தகங்களை எழுத்தியுள்ளார். இவரது படைப்பு தெலுங்கு, இந்தி, ஜெர்மன், பிரெஞ்சு உள்ளிட்ட மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டடுள்ளது.

pirapanjan

தனது வாழ்க்கை முழுவதும் தமிழ் இலக்கியத்துறைக்காக அர்பணித்த பிரபஞ்சன், இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சுயமரியாதை இயக்கங்களிலும் ஈடுபாடு கொண்டிருந்தார். ”என்னவுலகமடா பரணி” என்ற தனது முதல் சிறுகதை எழுதிய பிரபஞ்சன், 1995ம் ஆண்டு ’வானம் வசப்படும்’ என்ற புத்தகத்தை எழுதினார். வாசகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்ற அந்த நூலுக்காக மத்திய அரசு தமிழின் சாக்திய அகாடமி விருதை அறிவித்தது.

அதுமட்டுமின்றி, வானம் வசப்படும், மகாநதி, மானுடம் வெல்லும், சந்தியா, காகித மனிதர்கள், கண்ணீரால் காப்போம், பெண்மை வெல்க, பதவி, ஏரோடு தமிழர் உயிரோடு, அப்பாவின் வேஷ்டி, முதல் மழை துளி உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார்.

ஆண்களும், பெண்களும், சிறுக்கதை தொகுப்புகள், நேற்று மனிதர்கள், விட்டு விடுதலையாகி, இருட்டு வாசல், ஒரு ஊரில் இரண்டு மனிதர்கள், நாடகங்கள், முட்டை, அகல்யா, கட்டுரைகள், மயிலிறகு கட்டு போட்டது உள்ளிட்ட குறு நாவல்களையும் பிரபஞ்சன் படைத்துள்ளார்.