அடிமை புத்தியென ஏ.ஆர். ரகுமான் குடும்பத்தை விடாமல் சீண்டும் பெண் எழுத்தாளர்..

ஸ்கர் விருது பெற்ற நம் ஊர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். அவரது மகள் கதீஜா ,பாதம் முதல் முகம் வரை உடலை மறைக்கும் ‘பர்கா’ அணியும் பழக்கம் உள்ளவர்.

கடந்த ஆண்டு தந்தையுடன் ஒரு விழாவில் பங்கேற்ற அவர் ‘பர்கா; அணிந்திருந்ததை சிலர் விமர்சனம் செய்தனர்.

அதற்கு ரகுமான் பதில் அளித்திருந்தார்.

இப்போது ‘பர்கா’ விவகாரத்தை மீண்டும் கையில் எடுத்துள்ளார் பங்களாதேஷ் பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ் ரீன்.

சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததால் நாடு கடத்தப்பட்டுள்ள தஸ்லிமா. தனது ட்விட்டர் பக்கத்தில் ரகுமான் மகள் கதீஜா ‘பர்கா’ அணிவதை ஏளனம் செய்திருந்தார்.

கருப்பு முகத்திரை அணிந்து கதிஜா காட்சி அளிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, டவிட்டரில் தஸ்லிமா இவ்வாறு பதிவிட்டிருந்தார்.

’ஏ.ஆர்.ரகுமான் இசையை நான் பெரிதும் விரும்புகிறேன்.ஆனால் அவர் மகளை பார்க்கும் போது மூச்சுத்திணறி போகிறேன்.பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்த படித்த பெண்களையும் கூட மிக எளிதில் மூளைச்சலவை செய்யலாம் என அறியும் போது, எனக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது’’ என கிண்டல் செய்திருந்தார், தஸ்லிமா.

கதீஜாவுக்கு ட்விட்டர் இல்லை.எனினும் இன்ஸ்டாகிராம் வாயிலாக, தஸ்லிமாவுக்கு பதிலடி கொடுத்தார்.

’’ நாட்டில் என்னென்னவோ நடந்து கொண்டிருக்கிறது.ஒரு பெண் விரும்பி அணியும் உடை குறித்து கவலை ஏன்?
டியர் தஸ்லிமா நஸ் ரீன்.. எனது உடை உங்களை மூச்சு திணறச்செய்ததற்காக நான் வருத்தப்படுகிறேன். நல்ல காற்றை சுவாசியுங்கள்.நான் எடுத்துள்ள நிலை, எனக்குள்ள அதிகாரம் குறித்து நான் பெருமைபடுகிறேன். உண்மையான பெண்ணியம் குறித்து தெரிந்து கொள்ள கூகுள் பக்கம் போய் பாருங்கள்’’ என்று பதிலடி கொடுத்துள்ளார், ரகுமான் மகள்.

சும்மா இருப்பாரா தஸ்லிமா?

மீண்டும் சீண்டல்.

இந்த முறை கதீஜாவின் பெயரை குறிப்பிடவில்லை.

ஆனாலும் அவர் மீது மென்மையான விமர்சனம்.

‘ பர்கா அணிவோர் அதிகாரம் பெற்றவர்களாம். யுத்தம் என்பது அமைதியாம். அடிமைத்தனம் – சுதந்தரமாம். அறியாமை வலிமையாம்’’ என்று கதிஜாவை ட்விட்டரில் கலாய்த்துள்ளார், தஸ்லிமா.

-ஏழுமலை வெங்கடேசன்