காவல்துறை பதவிகளுக்கான எழுத்துத்தேர்வு நிறைவு

சென்னை: தமிழக காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையில் காலியாக உள்ள பதவிகளை நிரப்புவதற்கான தேர்வுகளின் முதற்கட்ட தேர்வான எழுத்துத்தேர்வு ஆகஸ்ட் 25ம் தேதியான இன்று சென்னையில் நடைபெற்றது.

தமிழக காவல்துறையில் 2ம் நிலை காவலர்கள்(ஆண், பெண்), 2ம் நிலை சிறைக் காவலர்கள்(ஆண், பெண் & மாற்று பாலினத்தவர்கள்), தீயணைப்பாளர்கள்(ஆண்கள் மட்டும்) ஆகிய பதவிகளுக்கான பொது எழுத்துத்தேர்வு தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்றது.

காலை 10 மணியளவில் துவங்கிய எழுத்துத்தேர்வு, 1.20 மணிநேரம் நடைபெற்று, 11.20 மணிக்கே நிறைவுற்றது.

இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், அடுத்ததாக உடல்தகுதி தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். மொத்தமுள்ள 8826 பதவிகளுக்கு, மாநிலத்தின் 228 மையங்களில் தேர்வெழுதியோர் எண்ணிக்கை 3.22 லட்சம். சென்னையில் தேர்வு நடத்தப்பட்ட மையங்களின் எண்ணிக்கை 13.