சந்திராயன் விண்கலம் ஏவப்பட்டதாக தவறான தகவல் அளித்த செய்தி தாள்கள்

சென்னை

நேற்று சந்திராயன் 2 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டதாக பல செய்தித்தாள்கள் தவறான செய்தியை வெளியிட்டுள்ளன.

இஸ்ரோ நேற்று காலை 2.51 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திராயன் 2 விண்கலத்தை ஏவ திட்டமிட்டிருந்தது. இதற்கான கவுண்ட் டவுன் நேற்று முன்தினம் தொடங்கியது.

 

 

அனைவரும் ஆவலுடன் இதை எதிர்பார்த்த வேளையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக திடீரென விண்கலம் ஏவுவது தள்ளி வைக்கப்பட்டது. தற்போது இந்த கோளாறு சரி செய்யப்பட்டு வருகிறது.

 

ஆனால் நேற்று காலை வெளியான பல செய்தித் தாட்களில் சந்திராயன் 2 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டுவிட்டதாக செய்திகள் வெளியாகின. பல பிரபல மலையாள மொழி செய்தித் தாள்களில் இந்த செய்திகள் வெளியாகியது.

 

இதில் பல செய்தித் தாள்கள் தங்கள் செய்தித் தாள்கள் மட்டுமே செய்திகளை சரியாக விரைவாக தருவதாக சொல்லிக் கொண்டு வருகின்றன. இவ்வாறு 4 செய்தித் தாள்கள் செய்தி வெளியிட்டுள்ளதாக மலையாள சமூக வலை தளத்தில் கூறப்பட்டுள்ளது.

 

 

 

இந்த நிலை தமிழகத்திலும் உள்ளது. பிரபல செய்தித் தாளான தினமலர் நாளிதழ் சந்திராயன் 2 ஏவப்பட்டுள்ளதாக செய்தியை வெளியிட்டது. அந்த பதிப்பு பல ஊர்களுக்கு அனுப்பட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி