Random image

தவறான சிகிச்சை- நோயாளி மரணம்: அப்பல்லோ மருத்துவமனைக்கு ரூ.57 லட்சம் அபராதம்

சென்னை:

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நோயாளி ஒருவர் மரணம் அடைந்த விவகாரத்தில்,  சென்னை அப்பல்லோ மருத்துவமனை 57 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க  நுகர்வோர் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீப காலமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு சிக்கல்களுக்கு ஆளாகி உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு, ஒடிசா மாநிலத்தை சேர்ந்த நோயாளி ஒருவர் மரணம் அடைந்தது தொடர்பாக ரூ.57 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த அபானிகுமார் பதி என்பவர், கடந்த 2003ம் ஆண்டு  மூல நோய் சிகிச்சைக்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 15 நாள் தங்கியிருந்து சிகிச்சை பெற்றார். இதற்கு கட்டணமாக அப்பல்லோ நிர்வாகம் ரூ.3 லட்சம் பெற்றுள்ளது.

ஆனால்,  சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அபானிகுமார் பதி 2016 நவம்பர் 2ம் தேதி திடீரென உயிரிழந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து, அபானி குமாரின் தந்தை,  , தனது மகனின் மரணத்துக்கு அப்பல்லோ மருத்துவமனையின் தவறான சிகிச்சைதான் காரணம் என்று சென்னை  நுகர்வோர் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், தனது மகன் மரணத்துக்கு ரூ.96 லட்சம் நஷ்ட ஈடு அப்பல்லோ நிர்வாகம் வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இது தொடர்பான விசாரணை பலக்கட்டங்களாக நடைபெற்று வந்த நிலையில், இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அபானி குமாருக்கு எப்பொழுது மாரடைப்பு ஏற்பட்டது, என்ன மாதிரி சிகிச்சை வழங்கப்பட்டது, மயக்க மருந்து ஏன் கொடுக்கப்பட்டது, என்பது தொடர்பான விவரங்களை முழுமையாக அப்போலோ மருத்துவமனை நிரூபிக்க தவறிவிட்டது என குற்றம் சாட்டினார்.

இதன் காரணமாக மரணமடைந்த அபானிகுமாரின் பெற்றோருக்கு, 57 லட்சத்து 74 ஆயிரம் ரூபாயை அப்போலோ மருத்துவமனையும், சிகிச்சை அளித்த மருத்துவர்களும் வழங்க வேண்டும் என்று  நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நாட்டின உயர்ந்த மருத்துவமனைகளில் ஒன்றான அப்பல்லோவின் தவறான சிகிச்சைக்காக ரூ.57 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.