உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி – செளதாம்ப்டனில் ஜூன் 18 – 22 நடைபெறுகிறது!

கொல்கத்தா: இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பைக்கான இறுதிப் போட்டி, இந்தாண்டு ஜூன் மாதம் 18 முதல் 22ம் தேதிவரை, பிரிட்டனில் செளதாம்படன் மைதானத்தில் நடைபெறும் என்று அறிவித்துள்ளார் பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலி.

முன்னதாக, அந்த இறுதிப்போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறலாம் என்று அதிகாரப்பூர்வமற்று கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது போட்டிக்கான இடம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக, இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள், இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றவுடன், போட்டி நடைபெறும் மைதானத்தைக் குறிப்பிடாமல், தேதி விபரத்தை மட்டுமே வெளியிட்டது ஐசிசி.

இந்நிலையில், தற்போது மைதானம் எது என்ற உறுதியான தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா காலத்தில், வீரர்கள் உயிர்-பாதுகாப்பு சூழலில் இருக்க, செளதாம்படன் நகரம் உதவிகரமாக இருக்கும் என்பது இது தேர்வுசெய்யப்படுவதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.