அறிகுறி இல்லாமலேயே கொரோனா வைரஸை பரப்பிய வூகான் இளம்பெண்

ன்யாங், சீனா

வூகான் நகரை சேர்ந்த ஒரு பெண் கொரோனா வைரஸ் அறிகுறி இல்லாமலே 5 பேருக்கு வைரஸை பரப்பி உள்ளார்.

சீனாவில் வூகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்த விவரம் கண்டுபிடிக்கப்பட்டது.   அந்த வைரஸ் தற்போது அந்நாட்டின் பல பகுதிகளில் பரவி உள்ளது,   அத்துடன் பல உலக நாடுகளிலும் இந்த வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது.   இந்த ஆட்கொல்லி வைரஸால் உலக சுகாதாரம் அமைப்பு அவசரநிலை பிரகடனம் செய்துள்ளது.

இந்த வைரஸ் பரவுதல் குறித்து அமெரிக்க மருத்துவ சங்கம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.   அந்த அறிக்கையில் சீனாவின் அன்யாங் நகரில் இந்த வைரசால் பாதிக்கப்பட்ட 5 பேர் குறித்த விவரம் வெளி வந்துள்ளது.   இந்த ஐவரின் உறவினர் பெண் வூகான் நகரில் வசித்து வந்துள்ளார்.   நகரில் கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகரித்ததால் அந்தப் பெண் தனது உறவினர் உள்ள அன்யாங் நகருக்கு வந்துள்ளார்.

வூகான் நகரில் இருந்து சுமார் 675 கிமீ தூரத்தில் அன்யாங் நகர் அமைந்துள்ளது. வூகான் நகரில் இருந்து வந்த அனைவரும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுத்தப்  படுவது வழக்கமாகும்..   அந்த சோதனையில் இந்த பெண்ணிடம் வைரஸ் தாக்குதல் அறிகுறி ஏதும் இல்லை என்பதால் இவர் தனிமப்படுத்தபபடவில்லை.

ஆனால் அவர் தங்கி இருந்த உறவினர் வீட்டில் ஐவருக்கு திடீர் என உடல்நலக் கோளாறு ஏற்பட்டுள்ளது.   அதையொட்டி அவர்கள் சோதனை செய்யப்பட்டதில் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருந்தது தெரிய வந்தது.   வீட்டில் உள்ள அனைவரும் சோதிக்கப்பட்டதில் வூகான் நகரில் இருந்து வந்த பெண் மூலம் வைரஸ் தொற்று உண்டானது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தப் பெண்ணைப் போல் பலர் ஏற்கனவே அறிகுறிகள் இல்லாததால் உலகின் பல நாடுகளிலும் தனிமைப்படுத்தப்படவில்லை.   ஆகவே அறிகுறிகள் இல்லாமலே கொரோனா வைரஸ் பரவுதல் ஏற்பட்டுள்ள விவரம் வெளியானதால் உலகின் பல நாடுகளிலும் இந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.