இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக WV ராமன் பெயர் பரிந்துரை!

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக தேர்வு செய்ய WV ராமன் பெயர் பரிந்துரைகப்பட்டுள்ளது. பெண்கள் அணியின் பயிற்சியாளராக ராமன் நியமிக்கப்பட்டதை பிசிசிஐ உறுதிப்படுத்தியுள்ளது.

raman

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 உலக கோப்பை போட்டியின் போது சிறப்பாக செயல்பட்டு அரையிறுதியில் இந்திய நட்சத்திர வீராங்கனை மிதாலி ராஜ் சேர்க்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியது. தன்னை வேண்டுமென்றே அரையிறுதியில் சேர்க்கப்படவில்லை என்றும், பயிற்சியாளார் ரமேஷ் பவார் பாகுபாடு காட்டியதாகவும் மிதாலி ராஜ் குற்றம்சாட்டி வந்தார்.

இதனை தொடர்ந்து ரமேஷ் பவாரின் பதவிக்கால முடிவடைய உள்ள நிலையில் புதிய பயிற்சியாளரை தேர்வு செய்ய பிசிசிஐ நடவடிக்கை மேற்கொண்டது. அதன்படி புதி பயிற்சியாளருக்கு பிசிசிஐ விடுத்த விண்ணங்களுக்கு ஹர்மன் பிரீத் மற்றும் மந்தனா ஆதரவுடன் மீண்டும் ரமேஷ் பவார் விண்ணப்பித்தார். அவர் மட்டுமின்றி, வெளிநாடுகளை சேர்ந்த பயிற்சியாளர்களான டேவ் வாட்மோர், ஓவாசிஸ் ஷா, ஹெர்ஸ்கேல் கிப்ஸ், டிமிட்ரி மஸ்காரன்ஹாஸ், டாமினிக் தார்ன்லி, கோலின் சில்லர் உள்ளிட்டோரும் விண்ணப்பித்தனர்.

இந்திய பயிற்சியாளர்களான அதுல் பெடாடே, டேவிட் ஜான்சன், ராகேஷ் சர்மா, மனோஜ் பிரபாகர், வித்யூத் ஜெய்சிமா, ரமேஷ் பவார் ஆகியோர் விண்ணப்பித்துள்ளனர். இதில் கார்ஜி பானர்ஜீ என்ற பெண் பயிற்சியாளரும் விண்ணப்பித்திருந்தார். இவர்களை தவிர்த்து உலக கோப்பை வென்ற ஆண்கள் அணியின் பயிற்சியாளராக இருந்த கேரி கிறிஸ்டனும் விண்ணப்பித்தார்.

பெண்கள் அணிக்கான புதிய பயிற்சியாளரை நேர்க்காணல் மூலம் தேர்வு செய்யும் பொறுப்பை பிசிசிஐ கபில்தேவ், அனுஷ்மான் கேக்வாத் மற்றும் சாந்தா ரங்கசாமி சார்ந்த குழுவிடம் ஒப்படைத்தது.

பயிற்சியாளர்களை நேர்காணல் செய்த கபில்தேவ் அடங்கிய குழு, கிறிஸ்டன், ராமன் மற்றும் வெங்கடேஷ் பிரசாத் பெயர்களை பிசிசிஐக்கு பரிந்துரை செய்தது. இதனை ஏற்ற பிசிசிஐ அந்த மூவரில் இருந்து ராமன் பெயரை தேர்வு செய்துள்ளது.

53 வயதான ராமன் தற்போது பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி அளித்து வசுகிறார். 11 டெஸ்ட் மற்றும் 27 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ராமன் இந்தியாவின் மிகச்சிறந்த பயிற்சியாளராக தகுதி பெற்றுள்ளார். இவர் ராஞ்சி டிராபி போட்டியின் போது தமிழ்நாடு மற்றும் பெங்கால் உள்ளிட்ட அணிகளுக்கும், யு-19 அணிக்கும் பயிற்சியாளராக இருந்துள்ளார்.