செல்போன் தொழில்நுட்பத்தில் நிறுவனங்கள் பல தொழில்நுட்பங்களை புதுமையாக புகுத்தி செல்போன் சந்தையில் தங்களை நிலை நிறுத்திக்கொள்ள போட்டிபோடுகின்றன. இந்நிலையில்தான் சியோமி நிறுவனத்தின் புதிய செல்போன், பல விதமான புதிய வசதிகளை கொண்டு அறிமுகப்படுத்தப்பட உள்ளது

4ஜி தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த செல்போன் திரை செல்போன் திரை முன் பின் முழுதும்(4D surround) பயன்படுத்தும்   வசதியுள்ளது, இப்போதுள்ள செல்போன் திரை ஒரு பக்கம் மட்டுமே பயன்படுத்த முடியும், ஆனால் மிக்ஸ் ஆல்பா புதிய செல்பேசியில் இருபுறமும் பயன்படுத்த முடியும், அது மட்டுமல்ல இந்த செல்பேசியில் பட்டன்களே இல்லை, மாறாக வலது ஓரத்திரையில் பட்டன்கள் தொடு திரையில் தோன்றும்

முக்கியமாக இந்த செல்போனில் 108 மெகாபிக்சல் கேமிரா உள்ளது, கேமிராவில் அதிகமான மெகாபிக்சல் கொண்டதாக இருக்கிறது, அது மட்டுமல்ல முதன்மை கேமிரா 20 மெகாபிக்சல் டெலிபோட்டோ தொழில்நுட்பத்தில் அமைந்துள்ளது

இதன் பிராசசர் ஸ்னாப்டிராகன் 855, 12 ஜிபி ரேம்,512 ஜிபி சேமிப்பகம், 4050 mah மின்கலம் போன்றவற்றோடு இந்த செல்போன் இந்தியாவில் வெளிவர உள்ளது

இதன் விலை தோராயமாக ரூ 1,90,000 விற்பனை செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது

-செல்வமுரளி