‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்டார் விஜய் சேதுபதி….!

விஜய் சேதுபதியின் 33வது படமான யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தை லாபம் பட உதவி இயக்குநர் வெங்கட கிருஷ்ணா இயக்குகிறார் .

சந்திரா ஆர்ட்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் மேகா ஆகாஷ் நடித்து வருகிறார். மேலும் நடிகர் விவேக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

விஜய் சேதுபதி இசை கலைஞராக நடிக்கும் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு பழனியில் நடைபெற்றது.

இந்த படத்திற்கு கே . பிரசன்ன இசையமைக்கிறார் .இந்தப் படத்தில் பிரபல இயக்குனர் மோகன்ராஜா இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில் தற்போது தனது யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தின் First லுக்கை தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் விஜய் சேதுபதி.