வெளியானது ‘யாருக்கும் அஞ்சேல்’ ஃபர்ஸ்ட் லுக்….!

‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படத்தைத் தொடர்ந்து பெண்களை மையப்படுத்தி த்ரில்லர் படமொன்றை இயக்கினார் ரஞ்சித் ஜெயக்கொடி.

பிந்து மாதவி மற்றும் தர்ஷனா பானி இருவரும் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்துக்கு ‘யாருக்கும் அஞ்சேல்’ என்று தலைப்பிட்டது படக்குழு.

ஒளிப்பதிவாளராக கவின் ராஜ், இசையமைப்பாளராக சாம் சி.எஸ், எடிட்டராக தியாகராஜன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

https://twitter.com/VijaySethuOffl/status/1306223864809058304

தற்போது இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார்.