ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் உருவாகும் படம் ‘யாருக்கும் அஞ்சேல்’….!

பெண்களை மையப்படுத்தி த்ரில்லர் படமொன்றை இயக்கியுள்ளார் ரஞ்சித் ஜெயக்கொடி.

இந்தப் படத்துக்கு ‘யாருக்கும் அஞ்சேல்’ என்று பெயரிடப்பட்டு, லோகோ வடிவமைப்பை வெளியிட்டுள்ளது படக்குழு.

இதனை சிம்புவும் விஜய் சேதுபதியும் வெளியிட்டுள்ளனர்.

இந்த படத்தில் பிந்து மாதவி மற்றும் தர்ஷனா பானி இருவரும் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சுமார் 30 நாட்களில் முழு படப்பிடிப்பையும் முடித்துவிட்டது படக்குழு.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், ட்ரெய்லர், இசை வெளியீடு ஆகியவை குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.