பீமரத சாந்தி யாகம் நடத்திய ரஜினி….!

ரஜினிகாந்த் வரும் 12ம் தேதி தனது 69வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். இந்நிலையில் அவர் வீட்டில் அதுவும் வளர் பிறை நாளில் பெரும்பாலும் கோவில்களில் செய்யப்படும் பீமரத சாந்தி யாகத்தை நடத்தியுள்ளார்.

ஒருவருக்கு 70 வயது ஆரம்பிக்கும்போது செய்வது தான் இந்த பீமரத சாந்தி யாகம். நீண்ட ஆயுள் கிடைக்கவும், எதிரிகளை வலுவிழக்கச் செய்யவும், நினைக்கும் காரியங்கள் நல்லபடியாக நடக்கவும் தான் இந்த யாகம் செய்யப்படும்.

இந்த நிலையில் அவர் அரசியலுக்கு வரவே யாகம் நடத்தி பலம் பெற்றுள்ளதாக பேச்சு கிளம்பியுள்ளது.