‘வலிமை’ படத்தில் அஜித்துக்கு ஜோடியாகும் யாமி கெளதம்…!

--

நேர்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படம் ’வலிமை’

போனி கபூர் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் படப்பூஜை மட்டுமே முடிவுற்றுள்ளது.

அஜித்துடன் நடிக்கவுள்ள நடிகர்கள் தேர்வு முடிவடைந்துவிட்டாலும், எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை .

இந்நிலையில் முதன்முறையாக ‘வலிமை’ படம் குறித்த சில தகவல்களை வெளியிட்டுள்ளார் போனி கபூர். “’வலிமை’ படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 13-ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. அடுத்தாண்டு தீபாவளிக்கு வெளியாகும். அஜித் இதில் காவல்துறை அதிகாரியாக நடிக்கவுள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அஜித் ஜோடியாக யாமி கெளதம் நடிக்கிறார் எனத் தகவல் கிடைத்துள்ளது. ‘கெளரவம்’ மற்றும் ‘தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும்’ ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்துள்ள இவர், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி, இந்தி ஆகிய மொழிப் படங்களில் நடித்துள்ளார்.