யமுனா அதிவிரைவு சாலையில் ஓவர் ஸ்பீடு: 12 ஆயிரம் டிரைவர்கள் உரிம்ம ரத்து!!

ஆக்ரா:

யமுனா அதிவிரைவு சாலையில் அதிவேகமாக வாகனங்களை ஓட்டுவோருக்கு உ.பி. போக்குவரத்து அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இவர்களுக்கு ரூ. 300 முதல் ரூ. 500 வரை அபராதம் விதிக்கப்ப டுகிறது.

4 முறை அபராதம் செலுத்திவிட்டு, 5வது முறை இதே விதிமீறலை மேற்கொள்ளும் வாகன ஓட்டிகளின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படுகிறது. இந்த குற்றத்திற்காக இது வரை 11 ஆயிரத்து 634 பேர் கொண்ட பட்டியல் தயாராக உள்ளது. ஆக்ராவில் மட்டும் 500 பேர் சிக்கியுள்ளனர்.

ஆக்ரா மற்றும் யமுனா அதிவிரைவு சாலை தொழிற் மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. இதில் இச்சாலையில் அதிகரித்து வரும் விபத்துக்களை குறை க்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

ஆக்ரா வட்டார போக்குவரத்து அலுவலர் அனில்குமார் கூறுகையில்,‘‘அதிவேகமாக செல்லும் வாகனங்களு க்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. வாகன உரிமையாளரின் முகவரியை கண்டுபிடிப்பதில் தாமதம் ஏற்ப டுகிறது’’ என்றார்.

மேலும், அவர் கூறுகையில்,‘‘ சுங்கச்சாவடி அதிகாரிகளுடன் இணைந்து வேகமாக செல்லும் வாகனங்களின் பட்டியலை பெற்றுள்ளோம். இதன் மூலம் வாகன உரிமையாளர் முகவரியை பெற்று நோட்டீஸ் அனுப்பி ஆர்டிஒ அலுவலகங்களில் அபராதம் செலுத்தும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறது’’ என்றார்.

ஆக்ரா ஆர்டிஓ அமலாக்கப் பிரிவு அதிகாரி அஜய் மிஸ்ரா கூறுகையில்,‘‘ போக்குவரத்து அதிகாரிகள் பணியில் இருந்தாலும் அதிவிரைவு சாலையில் வேகமாக செல்லும் வாகனங்களை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த சாலையில் அதிக விபத்துக்கள் நடக்கும் சூழ்நிலையை பல டிரைவர்கள் ஈர்ப்பு ச க்தியை உணராமல் செல்கின்றனர். 4 முறைக்கு மேல் வேகமாக வாகனங்களை ஒட்டும் டிரைவர்களின் உரிமம் உடனடியாக ரத்து செய்யபப்படும்’’ என்றார்.

இவ்வாறு நோட்டீஸ் அனுப்பி அபராதம் விதிக்கும் நடவடிக்கையின் போது, ஓட்டுனர் உரிமம் புதுப்பிக்காதது, தகுதி சான்றிதழ் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்கள் வெளிச்சத்திற்கு வருகிறது. அதனால் அவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுகிறது.

கடந்த மாதம் மட்டும் 21 ஆயிரத்து 807 நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆக்ராவில் மட்டும் 109 வாகனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த சாலை திறக்கப்பட்டு நான்கரை ஆண்டுகளில் 4 ஆயிரத்து 76 விபத்துகள் நடந்துள்ளது. இதில் 548 பேர் இறந்துள்ளனர். இதில் 2016ம் ஆண்டில் தான் அதிகளவில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.