இந்திய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்ற யாஷ் பிறந்த நாளுக்கு வெட்டப்பட்ட கேக்…!

’கேஜிஎஃப்’ படத்தின் நாயகன் நடிகர் யாஷ் தனது 34-வது பிறந்த நாளை கொண்டாடினார் .

இதற்காக யாஷின் ரசிகர் ஒருவர் 5,000 கிலோ கேக் ஒன்றைத் தயாரித்து வெட்டியுள்ளார். இன்னொரு ரசிகர் 216 அடி கட் அவுட் வைத்துள்ளார்.

பெங்களூருவில் தயாரிக்கப்பட்ட இந்த 5,000 கிலோ கேக், வேணு கௌடா தயாரித்துள்ளார் .

இதற்காக 1,800 கிலோ மாவு, 1,150 கிலோ சர்க்கரை, 1,750 கிலோ க்ரீம், 22,500 முட்டைகள், 50 கிலோ உலர் பழங்கள், 50 கிலோ நெய் ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளன.

40 அடிக்கு 70 அடி என்ற அளவிலிருந்த இந்த கேக், பெங்களூருவில் இருக்கும் நந்தி லிங்க் மைதானத்தில் வைக்கப்பட்டது. 20 பேர் கொண்ட குழு 96 மணிநேரம் உழைத்து இந்த கேக்கை உருவாக்கியுள்ளனர்.