‘கே.ஜி.எப் 2 ‘ மலையாள உரிமையை கைப்பற்றிய முன்னணி நடிகர்….!

தமிழ்,தெலுங்கு,மலையாளம்,ஹிந்தி என பல மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு 2018 இறுதியில் வெளியாகி இந்தியா முழுவதும் வசூல் சாதனை படைத்த KGF .

இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது.இந்த படத்தின் ரிலீஸை ஒட்டுமொத்த இந்தியாவுமே ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறது.

இந்த படத்தில் முக்கிய வில்லன் கதாபாத்திரங்களில் ஒன்றான அதிரா என்ற கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்கிறார். ரவீனா டாண்டன்,ரமேஷ் ராவ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ள்ளனர்.

இந்த படத்தின் கிளைமாக்ஸ் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து இந்த படத்தின் டீஸர் வரும் ஜனவரி 8ஆம் தேதி காலை 10.18 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த படத்தின் மலையாள உரிமையை பிரபல மலையாள நடிகர் பிரித்விராஜ் கைப்பற்றியுள்ளார் , இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

 

You may have missed