யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ், தனது தயாரிப்புகள் எதையும் ஸ்ட்ரீமிங்கில் வெளியிடாது என உறுதி….!

கொரோனா அச்சுறுத்தலால் நாட்டில் அனைத்து மக்களும் பொருளாதார நெருக்கடியில் முடங்கி போயுள்ளனர் . இதனால் ஊரடங்கு முடிந்து திரையரங்குகள் திறந்து உடனே படங்களை ரிலீஸ் செய்வதெல்லாம் நடக்காத காரியம் என தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை OTT ல் விற்க முடிவு செய்து வருகின்றனர் .

இதை படக்குழுவினர் நேற்று உறுதி செய்திருந்தனர்.இந்த அறிவிப்புக்கு ஐநாக்ஸ் , பிவிஆர் திரையங்க குழுமம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.இது குறித்து அறிக்கையும் விட்டது .

பாலிவுட்டின் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் என்ன முடிவெடுப்பார்கள் என திரைத்துறையில் பலரும் எதிர்நோக்கியிருந்தனர். ஆனால் தங்கள் படம் எதையும் யாஷ் ராஜ் தரப்பு ஓடிடியில் வெளியிடாது என்று கூறப்பட்டுள்ளது.

யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், சைஃப் அலி கான், ராணி முகர்ஜி நடிக்கும் ‘பண்டி அவுர் பப்ளி 2’, ரன்பீர், வாணி கபூர் நடிக்கும் ‘ஷம்ஷேரா’, ரன்வீர் சிங்கின் ‘ஜெயேஷ்பய் ஜோர்தார்’, அக்‌ஷய்குமாரின் ‘பிரித்விராஜ்’ உள்ளிட்ட படங்கள் வெளியாகத் தயாராக உள்ளன. மேலும் அந்தத் தயாரிப்பு நிறுவனத்தின் 50-வது ஆண்டையொட்டி சில பிரம்மாண்ட படங்களைப் பற்றியும் அறிவிக்கவுள்ளனர். இதில் எந்தப் படமும் ஊரடங்கால் கைவிடப்படவில்லை என்றும், அனைத்து படங்களும் திரையரங்கில் வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.