முதன்முறையாக மகன் போட்டோவை வெளியிட்ட யஷ்….!

பிரபல கன்னட நடிகரான யஷ் தன் இரண்டாவது மகனின் புகைப்படத்தை முதல் முறையாக இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த குழந்தையை யஷின் மனைவியும், நடிகையுமான ராதிகா பண்டிட் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 30ம் தேதி பெற்றெடுத்தார்.

குழந்தை பிறந்து 6 மாதங்கள் நிறைவடைந்ததை கொண்டாட யஷ் குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் நாகர்ஜுனா, அமலா தம்பதியின் மகன் அகில் அகினேனி குட்டி யஷின் புகைப்படத்தை பார்த்துவிட்டு வாழ்த்தி கமெண்ட் போட்டுள்ளார். தந்தை பிரபலமாக இருப்பதால் மகனிடம் எதிர்பார்ப்பு அதிகம் இருக்கும். ஆனால் நிச்சயம் நீ தீயாக இருப்பாய் என்றார் அகில்.