சன் டிவி சீரியலில் நடிக்க யாஷிகா ஆனந்த் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா….?

கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தவு பிறபிக்கப்பட்டுள்ளது. இதனால் படப்பிடிப்புகள் உட்பட அனைத்து படப்பிடிப்புளும் ஸ்தம்பித்தது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியது.

இந்நிலையில் சன் டிவி சீரியல்களில் டாப்பில் உள்ள சீரியலான ரோஜா சீரியலில் அதிரடி காட்டியிருக்கிறார் அதன் இயக்குநர்.

அதாவது ரோஜா சீரியலில் புதிய திருப்பமாக யாஷிகா ஆனந்த் இணைந்துள்ளார்.

யாஷிகா ஆனந்த் நடிக்கும் சில காட்சிகள் அண்மையில் ஷுட் செய்யப்பட்டுள்ளது. அதில் நாயகனான அர்ஜூனுடன் யாஷிகா ஆனந்த் டூ வீலரில் செல்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தது.

இந்த சீரியலில் நடிக்க யாஷிகா ஆனந்த் ஒரு எபிசோடுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது.