“யசோதா” குறும்பட மோஷன் போஸ்ட்டரை வெளியிட்ட கமல்…..!

கொரோனா லாக்டவுன் மக்கள் அனைவரது வாழ்க்கையையும் புரட்டி போட்டுள்ளது.வெளியில் செல்ல முடியாத சூழ்நிலை உள்ளதால் மற்றவர்களை போலவே சினிமா பிரபலங்களும் வீட்டிலிருந்தே சமூக வலைத்தளத்தில் பெரும்பான்மையான நேரத்தை கழித்து வருகின்றனர் .

கொரோனா லாக்டவுனில் நடிகை ஸ்ரீப்ரியா, நடிகர் நாசர் மனைவி கமீலா ஆகியோர் இணைந்து யசோதா என்கிற ஒரு குறும்படத்தை வீட்டிலேயே எடுத்துள்ளனர். அதன் மோஷன் போஸ்ட்டரை நேற்று நடிகர் கமல்ஹாசன் ட்விட்டரில் வெளியிட்டிருந்தார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் சிவக்குமார் இதில் நடித்துள்ளார். நடிகை சுஜா வருணியின் கணவர் அவர்.

யசோதா படத்தின் போஸ்ட்டரை கமல் வெளியிட்டுள்ளது பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “நான் வழிகாட்டியாக நினைக்கும் கமல் அவர்கள் என்னுடைய பெயரை குறிப்பிட்டுள்ளதை உண்மையில் பெருமையாகவும் கவுரவமாகவும் கருதுகிறேன். ஜீனியஸ் ஸ்ரீப்ரியா மற்றும் நாசர் உடன் பணியாற்ற ஆவலுடன் இருக்கிறேன். அது உங்களுக்கு பிடிக்கும் என்றும் நம்புகிறேன். உங்கள் ஆதரவு மற்றும் ஆசீர்வாதம் வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.