தலைவர்களை கட்டித் தழுவுவது வெளிநாட்டு உறவு இல்லை : பாஜக தலைவர்

டில்லி

முன்னாள் நிதி அமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவருமான யஷ்வந்த் சின்ஹா பாஜகவின் நான்காண்டு ஆட்சி குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார்.

பாஜகவின்  முன்னாள் நிதி அமைச்சரும் மூத்த தலைவருமான யஷ்வந்த் சின்ஹா மத்திய அரசு பற்றி தனது கருத்துக்களை வெளிப்படையாக கூறி வருகிறார்.  அவரது பல கருத்துக்களும் மத்திய அரசு குறித்த விமர்சனங்களும் சர்ச்சைக்கு உள்ளாகி வருகின்றன.   இந்நிலையில் மோடியின் வெளிநாட்டுப் பயணத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.

யஷ்வந்த் சின்ஹா, “வெளிநாட்டு உறவு என்பது பிரதமர் வெளிநாடுகளுக்கு செல்வதும் அங்குள்ள தலைவர்களை அவர் கட்டித் தழுவுவது மட்டுமே என்றாகி விட்டது.    சீனா போன்ற  அண்டை நாடுகளில் இருந்து இன்னும் மிரட்டல்கள் தொடர்கின்றன.   பாகிஸ்தான் தீவிரவாதிகளை ஒழிக்க நமது வீரர்கள் செய்த உயிர்த் தியாகம் வீணடிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீர் உட்பட எங்குமே தீவிரவாதம் அடக்கப்படவில்லை.    உள்நாட்டு ஜனநாயகம் இந்த ஆட்சியில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதையும் எதிர்ப்புக் குரல் கொடுப்போர் மீது அடக்கு முறை ஏவப்படுவதையும் நாம் ஒப்புக் கொள்ள வேண்டும்.   அதே நேரத்தில் கட்சிப் பிரமுகர்களின் எந்த ஒரு பேச்சையும் நாம் கவனிப்பதில்லை.     பாராளுமன்ற நடவடிக்கைகள் கடந்த 4 வருடங்களாக கேலிக் கூத்து ஆகி விட்டது. ” எனக் கூறி உள்ளார்