Random image

ஹர்திக் படேல் உண்ணாவிரதத்துக்கு யஷ்வந்த் சின்ஹா ஆதரவு

கமதாபாத்

ட ஒதுக்கீடு கோரிக்கைக்காக உண்ணாவிரதம் இருக்கும் ஹர்திக் படேலுக்கு பாஜக முன்னாள் அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா ஆதரவு தெரிவித்துள்ளார்.

கடந்த 11 நாட்களாக படேல் இனத்தவருக்கு இட ஒதுக்கீடு, விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக ஹர்திக் படேல் அகமதாபாத் நகரில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.   அவரது உண்ணாவிரதம் அரசியல் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாஜக தெரிவித்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று தனக்கு இந்த உண்ணாவிரதத்தால் மரணம் ஏற்படலாம் எனக் கூறி தனது உயிலை ஹர்திக் படேல் தயார் செய்துள்ளார்.  ஹர்திக் படேல் உண்ணாவிரதத்துக்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி,   திரிணாமுல் காங்கிரஸ், நேசிய வாத காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் ஆதரவை தெஇவித்துள்ளன.

இந்நிலையில் ஹர்திக் படேலை சந்தித்த முன்னாள் பாஜக அமைச்சரான யஷ்வந்த் சின்ஹா அவர் உண்ணாவிரதத்துக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.   அவருடன் பாஜகவின் பாராளுமன்ற உறுப்பினரான சத்ருகன் சின்ஹா, குஜராத் மாநில முன்னாள் பாஜக முதல்வர் சுரேஷ் மெகரா, மற்றும் மகாராஷ்டிரா முன்னாள் பாராளுமன்ற பாஜக உறுப்பினர் நானா படோல் ஆகியோரும் வந்தனர்.

யஷ்வந்த் சின்ஹா, “ஹர்திக் படேலின் உண்ணாவிரதம் நாடெங்கும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.  இது குறித்து எல்லா இடங்களிலும் பேசப்படுகிறது.  அவருடைய உண்ணாவிரதம் விவசாயிகள் கடன் தள்ளுபடியைக் கோரி உள்ளதால் இந்த விவரங்களை நாடெங்கும் எடுத்துச் செல்ல வேண்டும்.

மத்திய அரசு இட ஒதுக்கீட்டு முறைக்குள் வராத இனத்தவரின் முன்னேற்றத்துக்கான வழிமுறைகளை கண்டறிய வேண்டும்.  பின் தங்கியோர் ஆணையம் ஒன்றை அமைத்துள்ள அரசு பல பின் தங்கிய இனத்தவர்களை அதில் சேர்க்காமல் உள்ளது.   முடிந்த வரை அவ்வாறு உள்ளவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்” எனக் கூறி உள்ளார்.