கோலா, மகாராஷ்டிரா

பாஜக தலைவர் யஷ்வந்த் சின்ஹா மத்திய அரசை எதிர்த்து போராட விவசாயிகளைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் அகோலாவில் ஒரு விவசாய பேரணி நடைபெற்றது.  அதற்கு “பருத்தி, சோயா, நெல் பேரணி” எனப் பெயரிடப்பட்டிருந்தது.  இந்தப் பேரணியில் கலந்துக் கொண்டு பாஜக தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய பாஜக அமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா கலந்துக் கொண்டு உரையாற்றினார்.

அவர் தனது உரையில், “பாஜக ஆட்சிக்கு வரும் முன்பு பல வாக்குறுதிகளை அள்ளி வீசியது.  அதில் ஒன்று விவசாயப் பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதாரவிலையை விட 50% அதிக விலை அரசு அளிக்கும் என்பது.  ஆனாஅல் அதை மறந்தே போய் விட்டது.  எல்லையில் பயங்கரவாதிகளை எதிர்த்து சர்ஜிகல் ஸ்டிரைக் ராணுவ வீரர்கள் நடத்துவது போல் விவசாயிகளும் அரசை எதிர்த்து சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தி போராட வேண்டும்.  நீதி கிடைக்கும் வரை இந்தப் போராட்டத்தை நிறுத்தக் கூடாது.

பணமதிப்பு இழப்பு நடவடிக்கையால் தான் அனைத்து விவசாயப் பொருட்களின் விலைகளும் பாதிப்பு அடைந்தது.  தற்போது மோடி பணமதிப்பு இழப்பு நடவடிக்கை வெற்றியை அடைந்து விட்டதாக தெரிவிக்கிறார்.  அப்போது விவசாயிகளுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு ஏன் நஷ்ட ஈடு அளிக்கவில்லை.  இதை பாராளுமன்றத்தில் விவாதிக்கவும் வாய்ப்பில்லை.  சில தேர்தல்கள் பாராளுமன்ற நடவடிக்கைகளை விட முக்கியமாக சிலருக்கு தோன்றுகிறது.  அதனால் பாராளுமன்றக் கூட்டங்கள் ஒத்தி வைக்கப்படுகின்றன” என கூறி உள்ளார்.