82 ஆண்டுகால சாதனை முறியடிப்பு: 33 போட்டிகளில் 200 விக்கெட் வீழ்த்திய யாஷிர் ஷா

குறைந்த போட்டிகளில் 200 விக்கெட்டுகளை வீழ்த்தி பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் யாஷிர் ஷா சாதனை படைத்துள்ளார். 33 போட்டிகளில் 200 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் யாஷிர் ஷா 82 ஆண்டு கால சாதனையை முறியடித்துள்ளார்.

yasir

பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இந்த டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் தலா ஒரு வெற்றியைப்பெற்று சமநிலையில் உள்ளன.

இந்நிலையில் 3வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதன் நான்கவது நாள் ஆட்டத்தில் பாகிஸ்தானின் சுழற்பந்து வீச்சாளர் யாஷிர் ஷா நியூசிலந்து அணி வீரர் சோமர்வில்லேவை வீழ்த்தினார். இதன் மூலம் யாஷிர் ஷா தனது 200வது விக்கெட்டை பதிவு செய்துள்ளார். அதுமட்டுமின்றி இந்த விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம் யாஷிர் ஷா 82 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளார்.

இதற்கு முன்பாக ஆஸ்திரேலியாவின் கிளாரே கிராம்மெட் 1936ம் ஆண்டு 36 போட்டிகளில் 200 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் குறைந்த போட்டிகளில் 200 விக்கெட்டை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை கிளாரே படைத்தார். தற்போது கிட்டத்தட்ட 82 ஆண்டுகள் கடந்த நிலையில் யாஷிர் ஷ அதனை தகர்த்துள்ளார். அதாவது யாஷிர் ஷா 33 போட்டிகளில் 200 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.