ஸ்ரீபிரியா எழுதி, இயக்கி நடித்திருக்கும் குறும்படம் யசோதா. இதில் நாசர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
குறைந்த பட்ச வசதிகளைக்கூட மிகச் சரியாகப் பயன்படுத்தி சாதனை புரிவார்கள் நிபுணர்கள். நாசர் மற்றும் ஸ்ரீப்ரியா இணைந்து வழங்கும் ‘யசோதா’ குறும்படம் இதை நிரூபிப்பதுபோல் அமைந்திருக்கிறது. குறும்படம் என்ற கட்டுக்குள் அடங்கினாலும், நெஞ்சைத் தொடும் வகையில் அமைந்த நிறைவான படம் என்றுதான் இதைக் கூற வேண்டும். யாசோதா கதை என்ன் சொல்கிறது: ஊரடங்கு காலத்தில் ஒரு குடும்பத்தில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவங்களை ஆழமாக விவரிக்கிறது ‘யசோதா’. ஊரடங்கு காலத்தை உள்ளது உள்ளபடி, துல்லியமான முழுமையுடன் பார்வை யாளர்களுக்குக் கடத்துகிறது இந்த குறும்படம்.


சென்னையில் வசிக்கும் ஸ்ரீதர் கஸ்தூரி தம்பதியருக்கு குழந்தைகள் இல்லை. தேசிய அளவிலான ஊரடங்குக்கு சற்று முன்னதாக, வீட்டு வேலைக்காரப் பெண் பொறுப்பில் மனைவியை விட்டுவிட்டு, சொந்த ஊரிலிருக்கும் தன் வயதான தாயாரை பார்க்கப் புறப்படுகிறார் ஸ்ரீதர். ஊரடங்கு காரணமாக சென்னைக்கு திரும்ப இயலாத நிலையில், ஸ்ரீதரால் தன் மனைவியையோ வேலைக்காரப் பெண்ணையோ தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. எங்கே கஸ்தூரி?
இவ்வாறு கேள்விகுறியுடன் கதை இங்கு நின்றாலும் படம் விடை சொல்கிறது.
ஸ்ரீப்ரியா , நாசர் ஆகியோருடன் நித்யா, ஸ்ரீகாந்த், பானு பிரகாஷ், சோனியா போஸ், சிவகுமார் மற்றும் பலர் நடிக்கின்றனர். படத்தொகுப்பு:ரூபன். இசை:கிருஷ். பாடியவர்:நிருத்ரியா பிள்ளை.

யசோதா குறும் படத்தை ஸ்ருதி ஹாசன் இன்று வெளியிட்டார்.