Random image

ஆண்டுதோறும் 8 லட்சம் பேர் தற்கொலை…உலக சுகாதார அமைப்பு

வாஷிங்டன்:

ஆண்டுதோறும் 8 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்வதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

சாதாரண காரணங்களுக்காக கூட தற்கொலை செய்துகொள்ளும் சம்பவம் அதிகரித்துள்ளது. தனிமை, புறக்கணிப்பு, பயம், கவலை, வறுமை, குடும்ப வன்முறை, பாலியல் வன்முறை, விரக்தி போன்ற காரணங்களால் தற்கொலை செய்துகொள்வது அதிகளவில் உள்ளது. ஆண்டுதோறும் செப்டம்பர் 10-ம் தேதி உலக தற்கொலை தடுப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது.

இதையொட்டி பொதுநல இயக்கங்கள் தற்கொலை எதிர்ப்பு வழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில், உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,‘‘ஆண்டுதோறும் சுமார் 8 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

ஏழ்மை மற்றும் நடுத்தர வர்க்க நாடுகளில்தான் தற்கொலைகள் அதிகம் நடக்கிறது. சமூக அழுத்தங்கள், ஏற்றத்தாழ்வுகளும் ஒருவரது தற்கொலைக்கு தூண்டுதலாக உள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.