பெங்களூரு:

டைபெற்று முடிந்த லோக்சபா தேர்தலில் கர்நாடக மாநிலத்தில் பாஜக அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து, அங்கு  ஜேடிஎஸ்-காங்கிரஸ் கூட்டணி தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.  இந்த நிலையில், மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து புதிய சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக கர்நாடகா பாஜக தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

கர்நாடாகாவில் தற்போது காங்கிரஸ் கட்சி உதவிடன் மதசார்பற்ற ஜனதாதளம் ஆட்சி நடை பெற்று வருகிறது. இரு கட்சிகளுக்கும் இடையே  உரசல்கள் இருந்தாலும் ஆட்சி தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில், 28 தொகுதிகளை கொண்ட கர்நாடகா லோக்சபா தேர்தலில்  பாஜக 26 தொகுதி களை கைப்பற்றி உள்ளது. பெரும் எதிர்பார்ப்புடன் குடும்ப சண்டைகளுக்கு இடையே களமிறங்கிய  மாண்டியா மக்களவைத் தொகுதியில் குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி தோற்கடிக்கப்பட்டு உள்ளார். அங்கு சுயேச்சையாக போட்டியிட்ட சுமலாதா அம்பரீஷ் வெற்றி பெற்றுள்ளார்.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா, மீண்டும் சட்டமன்ற தேர்தலை சந்தித்து பாஜக ஆட்சியை பிடிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்து உள்ளார். ஆனால்,  ஜேடிஎஸ் துணை யுடன் ஆட்சி அமைப்பது முடியாத காரியம் என்பதையும் தெளிவுபடுத்தி உள்ளார்.

ஏற்கனவே கடந்த 2007 ம் ஆண்டில், 20-20க்கு என்று உடன்பாட்டில் ஜேடிஎஸ் கூட்டணிக்கு ஆதரவு அளித்த பாஜக பின்னர், இரு கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், பாஜக தனது ஆதரவை வாபஸ்  பெற்றது.

இந்த நிலையில் மீண்டும்,  “ஜே.டி.எஸ். உதவியுடன் ஒரு அரசாங்கத்தை உருவாக்குவது ஒரு அபாயகரமானதாகும், எடியூரப்பா, குமாரசாமி தலைமையின் கீழ் 20-20 ஆட்சியை நான் அனுபவித்திருக்கிறேன் என்பதை நினைவு கூர்ந்தார்.

பாஜக  புதிய சட்டமன்ற தேர்தலுக்கு தயாராக இருப்பதாகவும், லோக்சபா தேர்தலில், 26 தொகுதிகளை இழந்ததன் மூலம் ஜேடிஎஸ் – காங்கிரஸ் கூட்டணி மக்கள் நம்பிக்கையை இழந்துள்ளது என்றவர்,  இந்த கூட்டணி தொடர்ந்து ஆட்சியை நடத்தினாலும், அது மக்களின் தீர்ப்புக்கு எதிரானது என்று எடியூரப்பா கூறினார்.

மேலும்,  கூட்டணி கட்சிகள் ஒன்று சேர்ந்து, வறட்சி, மற்றும் குடிநீர் பிரச்சனை போன்ற மக்களின் பிரச்சனைகளை தீர்க்காமல், தாங்கள் ஆட்சியை நீடிப்பதை மட்டுமே சிந்தித்துக்கொண்டு இருக் கின்றனர். இதுதொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்ய, ஜூன் 1ம் தேதி ஆலோசனைக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அப்போது மாண்டியா தொகுதி எம்.பி. சுமலதாவை பாஜகவில் சேர்த்துக்கொள்வீர்களா என்ற கேள்விக்கு, அவர்,   எப்போது வேண்டுமானாலும் பாஜகவில் இணையலாம் என்று பதில் தெரிவித்துள்ளார்.