பெங்களூரு:

ர்நாடகாவில், எடியூரப்பா பதவி ஏற்றது முதல் தற்போது வரை 4 முறை, மாநில அமைச்சரவை அமைக்கப்படாத நிலையில், அமைச்சரவை கூட்டத்தை கூட்டி உள்ளார். இது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

குமாரசாமி தலைமையிலான அரசை கவிழ்த்துவிட்டு, கடந்த ஜூலை மாதம் 26ந்தேதி மீண்டும் மாநில முதல்வராக பதவி ஏற்றுள்ள எடியூரப்பா இதுவரை தனது மந்திரிசபையை விரிவாக்கம் செய்யாமல் இருந்து வருகிறார்.  அவர் பதவி ஏற்று 22 நாட்களுக்கும் மேலாகி உள்ள நிலையில், மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய முடியாமல் தவித்து வருகிறார்.

பல பாஜக எம்எல்ஏக்கள் உள்பட ஆதரவுக்கு ஆதரவு தெரிவித்த பல எம்எல்ஏக்களும் பதவி கேட்டு வற்புறுத்தி வரும் நிலையில், யாருக்கு பதவி கொடுப்பது என்பதை முடிவு செய்ய முடியாமல் தடு மாறி வருகிறார். அமைச்சரவையை அமைப்பது தொடர்பாக பிரதமர் மோடி உள்பட டில்லி பாஜக தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார். ஆனால், மேலிடத்தில் இருந்து சரியான தகவல்கள் கிடைக்காத நிலையில்,  மாநில அமைச்சரவை விரிவாக்கம் தள்ளிப்போய்க்கொண்டே வருகிறது.

இதற்கிடையில், மத்தியஅரசு அமல்படுத்தி உள்ள முத்தலாக் மசோதா உள்பட பல மசோதாக்கள் விவகாரம், கர்நாடகாவில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளப் பாதிப்பு மற்றும் காஷ்மீர் பிரச்சினை போன்றவற்றால் மேலிடத் தலைவர்கள் கர்நாடக மாநில அமைச்சரவை விரிவாக்கத்தில் ஈடுபாடு காட்டவில்லை என்ற கூறப்படுகிறது.

தனது அமைச்சரவை குறித்த விவாதங்களுக்காக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தலைவர் அமித் ஷா ஆகியோரை சந்திக்க பலமுறை முயற்சி செய்தும், அவரது முயற்சி கைகூடவில்லை.

இதற்கிடையில், எடியூரப்பா  மீண்டும் தலைநக்ர டில்லி சென்றுள்ளார். அங்கு இன்று காலை பிரதமர் மோடியை சந்தித்து பேசிய நிலையில், அமித்ஷா உள்பட மேலிடத்தலைவர்களை சந்தித்து பேசுவார் என தெரிகிறது. அப்போது, 33 அமைச்சர்கள் கொண்ட புதிய அமைச்சரவையை உருவாக்குவதற்கு ஒப்புதல் பெறப்படும் என்றும், அதையடுத்து வரும் 19ந்தேதி அல்லது ஓரிரு நாளில் புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பார்கள் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையில், மாநில வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக எடியூரப்பா இதுவரை 4முறை கேபினட் கூட்டத்தை கூட்டி விவாதித்து உள்ளார். தனி ஒருவரான இருக்கும் நிலையில், அமைச்சரவை கூட்டத்தில் கூட்டி வரும் எடியூரப்பா, அதில் அதிகாரிகளுடன் மட்டுமே உரையாடிச் செல்கிறார்.

எடியூரப்பா முதல்வராக  பதவியேற்றவுடன், கடந்த மாதம் ஜூலை 26 அன்று முதல் அமைச்ச ரவைக் கூட்டத்தை கூட்டினார்.  பின்னர்  மூன்று நாட்களுக்குப் பிறகு, ஜூலை 29 அன்று, நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, 2வது கூட்டத்தை கூட்டினார். 3வதாக கடந்த  ஆகஸ்ட் 14 ம் தேதி நடந்த மற்றொரு கூட்டத்தில், தனது தொகுதியான சிவமொகாவில் வளர்ச்சி பணிகள் தொடர்பான மூன்று திட்டங்களை அவர் தெளிவுபடுத்தினார். அதைத் தொடர்ந்து சமீபத்தில் 4வது முறையாக கேபினட் கூட்டத்தை நடத்தியுள்ளார்.

கேபினட் அமைச்சர்களே இல்லாமல், தனி ஒருவராக அதிகாரிகளுடன் விவாதித்து எடியூரப்பா அமைச்சரவை கூட்டத்தை கூட்டுவது மாநில எதிர்க்கட்சிகளிடையே வியப்பை ஏற்படுத்தி உள்ளது.