மேகதாது அணை கட்ட உடனடி அனுமதி வழங்க வேண்டும்: பிரதமர் மோடியிடம் எடியூரப்பா வலியுறுத்தல்

டெல்லி: மேகதாது அணைக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடியை சந்தித்து கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா வலியுறுத்தி இருக்கிறார்.

கர்நாடகா, தமிழகம் இடையே நீர் பங்கீடு தொடர்பாக, பல பிரச்னைகள் தொடர்ந்து நீடித்து வருகின்றன. குறிப்பாக, மேகதாது அணையை கட்ட தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பான வழக்கு ஒன்றும் உச்ச நீதிமன்றத்தில் இருக்கிறது.

இந் நிலையில் காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில், அணையை உடனடியாக கட்ட வேண்டுமென்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்து கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா வலியுறுத்த உள்ளார். நீர் வளத்துறை அமைச்சரையும் சந்தித்து இதே கோரிக்கையை விடுத்துள்ளார்.

இதற்கிடையில் 2 நாட்களுக்கு முன்பு சட்டசபையில் பேசிய தி.மு.க., தலைவர் மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது என்றும், விவசாயிகளின் நலனை காக்க தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று கேள்வி எழுப்பி இருந்தார்.