பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தின்  சூப்பர் சிஎம்-ஆக எடியூரப்பா மகன் விஜயேந்திரா செயல்படு கிறார் என்று  பாஜக எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். இது தொடர்பாக அவர்கள் 6 பக்க கடிதத்தை கட்சித்தலைமைக்கு எழுதி உள்ளனர்.

கர்நாடக மாநில முதல்வர் மாநில பாஜக தலைவர் எடியூரப்பா இருந்து வருகிறார். அவரது மகன் விஜயேந்திராவும் கட்சி பொறுப்பில் உள்ளார். இதன் காரணமாக அவர் தனது தந்தைக்குஇணையாக முதல்வர் போல் செயல்படுவதாக, பாஜக எம்எல்ஏக்கள் குற்றம்சாட்டி, கட்சித்தலைமைக்கு பரபரப்பு கடிதம் எழுதி உள்ளதாக கூறப்படுகிறது.

ஏழு பாஜக எம்எல்ஏக்கள் கூட்டாக கையெழுத்திட்டு எழுதியுள்ள அந்த கடிதத்தில்,  எடியுரப்பாவின் மகன் விஜயேந்திரா, எடியூரப்பாவின் மாநில அரசுக்கு இணையாக  ஒரு அரசாங்கத்தை நடத்தி வருவதாகவும், டெண்டர்கள் மற்றும் பிற ஒப்பந்தங்களில் தலையிட்டு,  முறைகேடாக பல கோடி சம்பாதித்து உள்ளதாகவும், இதற்கு அவர்  முதல்வருடனான தனது அருகாமையை தவறாகப் பயன்படுத்துவதாகவும் குற்றம் சாட்டி உள்ளனர்.

இந்த முறைகேடான செயலுக்கு,  31 பேர் கொண்ட குழுவை விஜேயேந்திரா உருவாக்கி உள்ளதாக வும், அவர்கள்  கட்சி மற்றும் அரசாங்கத்தில் பல்வேறு பதவிகளை வகித்து வருகின்றனர். இவர்களில், முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், அவரது உறவினர்கள் மற்றும் முதலமைச்சரின் பணியாளர்கள் கூட உள்ளனர் என்று அந்த கடிதத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து எடியூரப்பாவிடம் பல முறை கூறியிருப்பதாகவும், ஆனால், அதை கட்சி நலன் கருதி வெளியிடவில்லை என்றும், தற்போது அவரது ஆதிக்கம் அதிகரித்து வருவதால்,ந டவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது.

மேலும், தற்போதைய நிலையில், மாநில முதல்வரான  தனது தந்தையான எடியூரப்பாவை ஓரங்கட்டியதாகவும், அவர் மாநிலத்தின் அடுத்த முதல்வர் என்றும் கூறி, கட்சிக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் நிர்வாக முடிவுகளை விஜயேந்திரா எடுத்து வருகிறார் என்றும்,  அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக கர்நாடக  விஜயேந்திரர், ‘சூப்பர் சி.எம்’ போல செயல்படுவ தாகவும், முதல்வர் எடிடியூரப்பா தனது மகனை அரசாங்கத்தில் ஒரு இணையான சக்தி மையமாக மாற்ற அனுமதித்துள்ளார் என்ற குற்றச்சாட்டுகளை  தெரிவித்து உள்ளனர்.

மாநிலத்தின் அனைத்து திட்டங்களிலும் காங்கிரஸ் ஆட்சியின்போது, சித்தராமையா அரசு 10% கமிஷனாக  எடுத்துக் கொண்டதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியதைப் போல, இந்த அரசாங்க மும் 15% ‘விஎஸ்டி-விஜயேந்திர சேவை வரி’ வசூலிக்கிறது என்று குற்றம் சாட்டி உள்ளனர்.

‘இந்த விவகாரம் கர்நாடக பாஜகவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து மைசூரில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது  கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் எம்.லட்சுமன்,  இதுபோன்ற குற்றச்சாட்டுக்களை பல மாதங்களாக எதிர்க் கட்சிகள் அரசாங்கத்தின் மீது குற்றம்சாட்டி வந்தனர். தற்போது அதையே பாஜக எம்எல்ஏக்கள் அம்பலப்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

ஆளும் கட்சிக்குள்ளேயே குற்றச்சாட்டுகள் வெளிவருவதாகக் கூறிய லட்சுமன் அந்தக் கடிதம் மற்றும் அதில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டு உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார்.

ஆனால், பாஜஎ எம்எல்ஏக்களின் குற்றச்சாட்டுக்களை விஜயேந்திரா மறுத்துள்ளார். அவர் தனது டிவிட்டர் பக்கத்தில்,  சில எம்எல்ஏக்களின் குற்றச்சாட்டுக்கள், தனக்கு எதிரான அரசியல் சதி.  “இதுபோன்ற கதைகளைத் தயாரிப்பது என்பது காங்கிரஸ் கட்சியால் கடைப்பிடிக்கப்படும் ஒரு பழைய தந்திரமாகும், இதுபோன்ற ஒரு முயற்சி மைசூருவில் இருந்து வரும் அறிக்கையில் எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற தீங்கிழைக்கும், அரசியல் நோக்கம் கொண்ட குற்றச்சாட்டுகளுக்கு நான் அடிபணிய மாட்டேன். இதுபோன்ற வதந்திகளால் எனது ஒழுக்கத்தை குறைக்க முடியாது ” என தெரிவித்து உள்ளார்.

கர்நாடகா பாஜகவின்  துணைத் தலைவர்களில் ஒருவராக விஜயேந்திரா இருந்து வருகிறார். அவர் மீது ஆகஸ்டு1ந்தேதி அன்று  பாஜக எம்எல்ஏக்களால் இந்த குற்றச்சாட்டு கடிதம் எழுதப்பட்டுள்ளது. ஏற்கனவே பல முறை இதுபோன்ற குற்றச்சாட்டு கடிதங்கள் வெளி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.