எடியூரப்பா நாளை கர்நாடக முதல்வராகிறாரா ?

--

பெங்களூரு

பாஜகவின் எடியூரப்பா நாளை கர்நாடக முதல்வராக உள்ளதாக அதிகாரபூர்வமற்ற தகவல் ஒன்று தெரிவிக்கிறது.

நடந்து முடிந்த தேர்தலில் அதிக இடங்களைக் கொண்ட தனிக்கட்சியாக பாஜக உள்ளது.

காங்கிரஸ் – மஜத இரு கட்சிகளும் இணைந்து தங்களிடம் பெரும்பான்மை உள்ளதால் தங்களை அரசு அமைக்க அழைக்க வேண்டும் என கர்நாடக ஆளுநரிடம் கடிதம் அளித்துள்ளன.

இந்நிலையில் கவர்னர் எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அழைக்க உள்ளதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.

பாஜக தனிப்பெரும் கட்சியாக உள்ளதால் ஆளுநர் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

நாளை கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவி ஏற்க உள்ளதாக அந்த தகவல் தெரிவிக்கிறது.