மட்டகளப்பு:

லங்கை வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் பேரவையால் ஏற்பாடு செய்யப்பட்ட   ‘எழுக தமிழ்’ எழுச்சிப் பேரணியும், மாநாடும் பிரம்மாண்டமாக மட்டளப்பு நகரில் நடைபெற்றது.

வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைத்து ஒரே மாகாணமாக உருவாக்க வேண்டும், தமிழர்களிடமிருந்து அரசு பறித்த நிலங்களை ஒப்படைக்க வேண்டும், சிறைவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும், காணாமல் போனவர்களை கண்டுபிடிக்கவேண்டும் என்பது உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த பேரணி நடைபெற்றது.

இந்த பேரணிக்கு, இலங்கை வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமை வகித்தார். யாழ்.மாவட்ட பாரளுமன்ற உறுப்பினரும், புளொட் தலைவருமான தருமலிங்கம் சித்தார்தன் மட்டக்களப்பு

மாவட்ட பராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், முன்னாள் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரத்தினம் தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர் எஸ்.வசந்தராஜா உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

ஏராளமான தமிழ் மக்கள் கலந்துகொண்ட இந்த பிரம்மாண்டமான பேரணி, நாவற்குடா மைதானத்தில் “எழுக தமிழ்”  மாநாடு நடைபெற்ற  மைதானத்தில் நிறைவடைந்தது.

பிறகு அங்கு மாநாடு நடைபெற்றது.

வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைத்து ஒரே மாகாணமாக உருவாக்க வேண்டும், தமிழர்களிடமிருந்து அரசு பறித்த நிலங்களை ஒப்படைக்க வேண்டும், சிறைவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும், காணாமல் போனவர்களை கண்டுபிடிக்கவேண்டும் என்பது உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி தலைவர்கள் பேசினார்கள்.