ன்னா, ஏமன்

மன் நாட்டின் தலைநகர் சன்னாவில், மூன்று வயதுக் குழந்தையை பலாத்காரம் செய்து கொன்ற இளைஞரின் கைகளைக் கட்டி நடு ரோட்டில் குப்புறப்படுக்க வைத்து துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இஸ்லாமிய நாடான ஏமனில் ஹரியத் சட்டம் நடைமுறையில் உள்ளது.  அதன்படி பாலியல் பலாத்காரத்துக்கு நடு ரோட்டில் மரணதண்டனை அளிப்பது வழக்கம்.  கடந்த 2009லிருந்து இது போல தண்டனை அளிக்கப்படவில்லை.  தற்போது மீண்டும் அளிக்கப்பட்டுள்ளது.

முகமது அல் மக்ராபி (வயது 41) என்பவர் மூன்று வயதுப் பெண் குழந்தைய பலாத்காரம் செய்து பின் கொலை செய்து விட்டார். இதற்காக அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டு இந்த வாரம் அது நிறைவேற்றப்பட்டது.

இதை நேரடியாக பார்த்த ஒரு செய்தியாளர் தெரிவித்ததாவது :

”மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட தஜ்ரீர் ஸ்கொயர் மிகவும் பரப்பரப்புடன் எக்கச்சக்கமான மக்கள் கூட்டத்துடன் காணப் பட்டது.  இறந்து போன பெண்ணின் உறவினர்கள் முகமதுவை கடத்திச் செல்ல திட்டமிட்டுள்ளதாக வந்த தகவலினால் பாதுகாப்பும் பலப்படுத்தப் பட்டிருந்தது.  மக்கள் கட்டிடங்களின் கூரை மேலும் தந்திக் கம்பங்களின் மேலும் ஏறி இந்தக் காட்சியைக் காண ஆவலுடன் காத்திருந்தனர்.

முகமது பலத்த பாதுகாவலுடன் அழைத்து வரப்பட்டார். முன்னாலும், பின்னாலும் காவல் வாகனங்கள் பாதுகாவலுடன் அவர் வந்ததும் கூடி இருந்த மக்கள் அல்லாவே மிகப் பெரியவன் என கோஷமிட்டனர்.  அந்தக் கூட்டத்தில் நானும் அலைக்கழிக்கப்பட்டேன்.  காவல்துறையினர் முகமதுவின் கைகளை பின்புறமாக கட்டி முகத்தையும் கறுப்புத்துணியால் மறைத்தனர்.  பின்பு அவரை நடு ரோட்டில் குப்புறப்படுக்க வைத்தனர்.  தன்னை சுடவந்த காவலரிடம் முகமது ஏதோ சொல்ல முயற்சித்தார்.  ஆனால் அதை கண்டு கொள்ளாமல் தன்னிடமிருந்த ஏகே 47 துப்பாக்கியால் அவர் முதுகுக்கு மிக அருகாமையில் இருந்து அவரை நான்கு முறை சுட்டார்.  தண்டனை நிறைவேற்றப்பட்டது.  இறந்த முகமதுவின் உடலைக் காண மக்கள் ,முண்டியடித்துக் கொண்டு சென்றனர்.  ஆனால் போலிசார் அந்த உடலை ஒரு வாகனத்தில் ஏற்றி அங்கிருந்து வேகமாக சென்று விட்டார்.” என கூறியுள்ளார்.

தண்டனை நிறைவேற்றப்பட்டதும், குற்றவாளியின் தந்தையான ரானா அல் மட்டாரியிடம் இது பற்றிக் கேட்டபோது. தற்போது தான் தனது மனம் அமைதி அடைந்தது என்றும் தான் இன்றுதான் புதிதாகப் பிறந்தது போல் உணர்வதாகவும் கூறியுள்ளார்.