டெல்லி:

னியார் வங்கிகளில் 4வது பெரிய வங்கியாக கோலோச்சி வந்த  YES வங்கியின் நிர்வாகக் குழுவை, இந்திய ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

யெஸ் வங்கியை நிர்வகிக்க எஸ்பிஐ வங்கியின் முன்னாள் அதிகாரி பிரசாந்த் குமாரை ஆர்பிஐ  நியமனம் செய்து உத்தரவிட்டு உள்ளது.  இதைத்தொடர்ந்து,  பணம் எடுப்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை  விதிததுள்ளது.

அதன்படி,  ரூ .50,000 / – க்கு அப்பால் எந்தவொரு வைப்புத்தொகையாளருக்கும் பணம் செலுத்துவதில் இருந்து யெஸ் வங்கியை அரசு தடை செய்துள்ளது (அனைத்து கணக்குகளும் இணைந்து).

யெஸ் (YES)  வங்கியின் வைப்புத் தொகை வைத்துள்ளோர் ரூ.50,000 வரை மட்டுமே எடுக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. YES

இது மார்ச் 5, 2020 முதல் ஏப்ரல் 3, 2020 வரை பொருந்தும். இதற்கு மேலே உள்ள எந்தவொரு தொகையும் ரிசர்வ் வங்கியின் சிறப்பு அனுமதியுடன் பின்வரும் நோக்கங்களுக்காக மட்டுமே அனுமதிக்கப்படும் என்று அறிவித்து உள்ளது.

1) மருத்துவ அவசரநிலை

2) ஒரு சார்புடையவருக்கு வெளிநாட்டு கல்விக்கான கட்டணம்

3) குடும்பத்தில் திருமணம்.

யெஸ் வங்கி  பங்குகளுக்கு எதிராகக் கடன் வழங்கியதில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டது. பல முன்னணி நிறுவனங்களின் தலைவர்கள், அவர்கள் நிறுவனப் பங்குகளுக்கு எதிராகக் கடன் வாங்கியதும் அதைத் திருப்பிச் செலுத்தாததும் தான் காரணம் என கூறப்பட்டது.

ஏற்கனவே  கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் காபி டே நிறுவனத்தின் தலைவர் வி.ஜி.சித்தார்தா-வின் தற்கொலை, கார்வி பங்கு வர்த்தக நிறுவனத்தின் மோசடிகள்  போன்றவை யெஸ் வங்கிக்கு பெரும் சுமையை ஏற்படுத்தியது.

இதற்கிடையில், கடந்த சில ஆண்டுகளாக  இந்தியாவில் நிலவும் மோசமான பொருளாதார வளர்ச்சி, நிதி நெருக்கடி போன்றவற்றால், பல முன்னணி நிறுவனங்கள் வங்கிகளில் வாங்கிய கடன்கள் போன்றவற்றால் பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறது.

இதையடுத்து, அடமானம் வைக்கப்பட்ட நிறுவனங்கள் மீதான மதிப்பும் நம்பிக்கையும் குறைந்த நிலையில் அனைத்து நிறுவனங்களும் உடனே  கடனை திருப்பிச் செலுத்த வேண்டும் அல்லது பங்குகளை விற்பனை செய்து கடனை தீர்க்கும் படி நிதி அமைப்புகள் நெருக்கடி கொடுத்து வருகிறது. ஆனால் பெரும் நிறுவனங்கள் தாங்கள் வாங்கிய கடன்களை செலுத்த மறுத்து வரும் நிலையில், யெஸ் வங்கி திவாலாகும் நிலைமைக்கு தள்ளப்பட்டு உள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு  டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த 3-ம் காலாண்டில் யெஸ் வங்கியின் லாபம் 22 சதவீதம் உயர்ந்தது மட்டும் இல்லாமல் சொத்துக்களின் தரமும் அதிகரித்துள்ளதாக அதன் தலைவர் ரானா கபூர் குறிப்பிட்டிருந்தார். கடந்த 2018ம் ஆண்டு நிகர லாபம் 22 சதவீதம் உயர்ந்து 1,077 கோடி ரூபாய் பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

ஆனால், கடந்த ஓராண்டில் பெறு நிறுவனங்களுக்கு வழங்கிய கடன்கள், வாராக்கடன்களாக மாறி உள்ள நிலையில், அந்த வங்கி பெரும் இழப்பை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.