டெல்லி:

ன்று டெல்லியில் நடைபெற்று வரும் உலகளாவிய வணிக உச்சி மாநாடுக்கு ஸ்பான்சர் செய்த யெஸ் வங்கி…. இன்று மாநாடு நடைபெறும் நேரத்தில் அந்த வங்கியின் நிலைமையே கேள்விக்குறியாகி உள்ளது. கடுமையான நிதிச்சுமையில் சிக்கித் தவித்த வங்கியை இந்திய ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் எடுத்துள்ளது.

இதன் காரணமாக அங்கு கணக்கு வைத்துள்ள பொதுமக்கள் தங்களது பணம் ஸ்வாகா ஆகிவிடுமோ என்ற பயத்தில் வாயிலும், வயிற்றிலும் அடித்துக்கொள்ளும் அவலத்துக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

தலைநகர் டெல்லியில் 2 நாள்  உலகளாவிய வணிக உச்சி மாநாடு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. அங்குள்ள தாஜ் பேலஸ் ஹோட்டலில் நடைபெறும் இந்த மாநாட்டில் இந்தியா உள்பட 35 நாடுகளைச் சேர்ந்த பொருளாதார வல்லுநர்கள் கலந்துகொள்கிறார்கள்.

இந்த மாநாட்டில் இந்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீத்தாராமனும் கலந்துகொள்ளும் நிலையில், பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றுகிறார்… இந்த மாநாட்டில் இந்திய பொருளாதாரத்தை உயர்த்துவது குறித்து பேசப்போகிறார்கள்….

ஆனால், இந்த உலகளாவிய மாநாட்டுக்கு மெயின் ஸ்பான்சராக இருந்து ஏராளமாக நிதி உதவி செய்து வந்தது யெஸ் வங்கி. ஆனால், தற்போது வங்கியை ரிசர்வ் வங்கி கைப்பற்றி உள்ள நிலையில், வங்கியே இல்லாத நிலையில் வெறும்  மாநாடு மட்டுமே  தொடங்கி நடைபெற்று வருகிறது… வங்கிதான் திவாலாகும் நிலைக்கு சென்று  கொண்டிருக்கிறது…

பொருளாதார மாநாட்டில் உலக பொருளாதாரம் குறித்து விவாதிக்கப்படும் நிலையில், நமது நாட்டில் வெற்றி கரமாக செயல்பட்டு வந்த தனியார் வங்கி, மோடி அரசின் திறமையின்மையால் ஏற்பட்டுள்ள பொருளாதார சீரழிவு காரணமாகவும், வாராக் கடனுக்காகவும் இன்று திவாலை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது…

ஏற்கனவே பல தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் பெரு நிறுவனங்களுக்கு கடன் கொடுத்து, திவாலாகி உள்ள நிலையில், நாட்டின் 4வது பெரிய வங்கியாக திகழ்ந்த யெஸ் வங்கி…. கடந்த ஓராண்டில் மட்டுமே பெருமளவில் கடனை வாரிக்கொடுத்து, இன்று நிதிச்சிக்கலில் சிக்கி தவித்துக்கொண்டிருக்கிறது. தற்போது, யெஸ் வங்கியை  ரிசர்வ் வங்கி கையகப்படுத்தி உள்ளது…

இதனால், இந்த வங்கியில் முதலீடு செய்திருந்த கோடிக்கணக்கான சமானிய பொதுமக்கள், தங்களது சொந்த பணத்தை எடுக்க முடியாமல்,  பெரும் அவஸ்தை பெற்று வருகின்றனர்…

குறிப்பாக இந்த வங்கியில் புதிய தொழில்முனைவோர்கள் ஏராளமானோர் கணக்கு வைத்துள்ள நிலையில், இன்று அவர்களின் நிலை… கேள்விக்குறியாகி உள்ளது… இது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது….

ரிசர்வ் வங்கி கையப்படுத்திய நிலையில், வங்கில் கணக்கு வைத்துள்ளவர்,  50ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே பணம் எடுக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.  மருத்துவம், கல்வி, திருமணம், தவிர்க்க முடியாத அவசர தேவைகளுக்கு வங்கி மேலாளரின் அனுமதியுடன் 5 லட்சம் ரூபாய் வரை பணம் எடுத்துக் கொள்ளலாம்.

வங்கிக் கணக்கின் காசோலை மற்றும் ஏதாவது ஒரு அடையாள அட்டை ஆகியவற்றைக் கொண்டு வந்து கணக்கில் உள்ள பணத்தை எடுக்கமுடியும் என்று தெரிவித்துள்ளனர். இதுமட்டுமின்றி, வங்கியின்  அஏடிஎம் மற்றும் ஆன்லைன் சேவையும் முடக்கப்பட்டு உள்ளது.