நான் ‘கான்தான்’ இப்போ அதுக்கு என்ன? டுவிட்டரில் கடுப்பான குஷ்பு

டிகர் விஜய் நடித்து வெளிவந்த மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி குறித்து மத்திய அரசுக்கு நடிகர் விஜய் பேசியிருந்ததால், பாஜக வினர் அவரை ஜோசப் விஜய் என்று கூறி மதப்பிரச்சினையை உருவாக்கி சர்ச்சையை ஏற்படுத்தினார்.

இந்நிலையில் நடிகர் குஷ்பு குறித்தும் ஒருசிலர் அவரது உண்மையான பெயரை காரணம் காட்சி சர்ச்சையை ஏற்படுத்த முயன்று வருகின்றனர்.

நடிகை குஷ்பு  அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக செயல்பட்டு வருகிறார். அவர் குறித்து சமூக வலைதளங்களில் பாஜகவினர் மீம்ஸ் போட்டு சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்ற னர். அதில் ஒருசிலர் குஷ்புவின் பிறப்பு குறித்து சர்ச்சையை கிளப்பி வருகின்றனர்.

இந்நிலையில், அவரது உண்மையான பெயர் குறித்து பாஜகவிரின் சர்ச்சைக்கு பதில் அளித்துள்ள குஷ்பு தனது பெயர்  நக்கத்கான் -தான் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து, ஒருவரின் கேள்விக்கு பதில் அளித்து தனது டுவிட் செய்துள்ள குஷ்பு,

“முட்டாள், அது என் பெயர். எனது பெற்றோர்களால் வைக்கப்பட்டது … ஆமாம் நான் ஒரு கான்தான்… இப்போது அது என்ன?” என்று காட்டமாக கேள்வி விடுத்துள்ளார்.