ஆம்.. நான் இடதுசாரிதான்!: நடிகர் பிரகாஷ்ராஜ்

ங்குனி, மேற்கு வங்கம்

னைவருக்கும் உணவு, அனைவருக்கும் கல்வி தர மறுக்கும் அரசாங்கத்தை எதிர்த்தாலோ, மக்களை மதவெறி அடிப்படையில் பிரிக்கும் அரசுக்கு எதிராகப் போராடினாலோ உடனே, “நீங்கள் இடதுசாரியா?” என்றால், “ஆம், நான் இடதுசாரிதான்” என்று நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்தார்.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 50ஆவது மாநில மாநாடு மேற்கு வங்க மாநிலம், தங்குனி என்னும் இடத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாநாட்டைத் துவக்கிவைத்து நடிகர் பிரகாஷ் பேசியதாதாவது:

“மக்களை மதவெறி அடிப்படையில் பிரித்திட என்றைக்கு பாஜக ஆட்சியாளர்கள் முன்வந்தார்களோ.. எப்போது பகுத்தறிவாளர் கௌரி லங்கேஷ் போன்றவர்களைக் கொலை செய்வதைக் கண்டு எதுவும் கூறாத ஓர் ஆட்சி மத்தியில் நடைபெறத் தொடங்கியதோ.. அன்றிலிருந்தே மகிழ்ச்சியான என் திரைப்பட வாழ்க்கையை முறித்துக்கொண்டுவிட்டேன். என் நாட்டு மக்களை துயரத்தில் வீழ்த்திடும் ஓர் ஆட்சி நடந்துகொண்டிருக்கின்றபோது, என்னால் அதை கண்டும் காணாமல் இருக்க முடியாது. அப்படியோர் வாழ்க்கையை வாழ என்னால் முடியாது.

கௌரி லங்கேஷைத் தொடர்ந்து ஒருவர்பின் மற்றொருவர் என்று பகுத்தறிவுவாதிகள் கொல்லப்படுகிறார்கள்.. ஆனால் நம் பாரதப் பிரதமர் மோடி இது குறித்து வாயே திறக்கவில்லை. மவுனமாக இருக்கிறார்.

ஆட்சியாளர்களுக்கு எதிராகக் குரல்கொடுப்பவர்களை துப்பாக்கிக்குண்டு மூலம் அடக்க நினைக்கக்கூடிய அளவிற்கு சமூகம் சகிப்புத்தன்மையைற்றதாக மாறிக்கொண்டிருக்கிறது. இதை எதிர்த்து கேள்வி எழுப்பினால், எனக்கு எதிராகவும் தாக்குதல் தொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். சமூக வலைத்தளங்களில் என்னை எள்ளிநகையாடத் தொடங்கிவிட்டார்கள். நான் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்தவன் அல்ல என்பதை குறிப்பிட விரும்புகிறேன். ஆனாலும் பாஜக அரசாங்கம் தூக்கி எறியப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

நம் சிந்தனைகளை மழுங்கடித்திட, பாஜக கார்ப்பரேட் ஊடகங்களைப் பயன்படுத்த முயற்சி செய்துகொண்டிருக்கிறது. அடுத்த ஐம்பது வருடங்களுக்கு தாங்கள்தான் ஆட்சியில் இருப்போம் என்று மிகவும் அடாவடித்தனமாகக் பேசிக்கொண்டிருக்கிறது. இதன்பொருள், நம் சிவில் உரிமைகளைப் பறித்திடத் திட்டமிட்டிருக்கிறார்கள் என்பதுதா. அனைவருக்கும் உணவு, அனைவருக்கும் கல்வி தர மறுக்கும் அரசாங்கத்தை எதிர்த்தாலோ, மக்களை மதவெறி அடிப்படையில் பிரிக்கும் அரசுக்கு எதிராகப் போராடினாலோ, “நீங்கள் இடதுசாரியா?” என்றால், “ஆம், நான் இடதுசாரிதான்” என்று பிரகாஷ்ராஜ் பேசினார்.