“ஜூவாலாவை எனக்கு பிடிக்கும்”- விஷ்ணு விஷால்

நடிகர் விஷ்ணு விஷால் 4 ஆண்டுகள் காதலித்து மணந்த மனைவியை கடந்த வருடம் விவாகரத்து செய்து பிரிந்தார்.

இந்த நிலையில் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவும், விஷ்ணு விஷாலும் ரகசியமாக சந்திப்பதாகவும், நெருங்கி பழகுவதாகவும் கிசுகிசுக்கள் வந்தன.

அதற்கு விஷ்ணு விஷால் மறுப்பேதும் தெரிவிக்காமல் ஜூவாலா கட்டாவுடன் நெருக்கமாக செல்பி எடுத்து அந்த படங்களை சமூக வலைத்தளத்தில் விஷ்ணு விஷால் வெளியிட்டார். இது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சூழலில் “எனக்கு ஜூவாலாவை ஓராண்டு காலமாக தெரியும். எனக்கு ஜூவாலாவை பிடிக்கும். அதுபோல் ஜூவாலாவுக்கும் என்னை பிடிக்கும்.

எங்கள் தொடர்பு இதை தாண்டி அடுத்த கட்டத்துக்கு செல்லுமா? என்பதை இப்போது சொல்ல முடியாது. இருவரும் அவரவர் வேலையில் பிசியாக இருக்கிறோம்” என்று கூறியுள்ளார்

கார்ட்டூன் கேலரி