எம்.ஜி.ஆர்-கணவன்: சிவாஜி- காதலன்: கூண்டுக்கிளி நாயகியின் குதூகல அனுபவம்..

எம்.ஜி.ஆர்-கணவன்: சிவாஜி- காதலன்: கூண்டுக்கிளி நாயகியின் குதூகல அனுபவம்..

அந்த காலத்து சூப்பர் ஸ்டார்களான எம்.ஜி.ஆரும், சிவாஜியும் சேர்ந்து நடித்த ஒரே படம்- கூண்டுக்கிளி.

இதில் கதாநாயகியாக நடித்தவர், பிஎஸ்.சரோஜா.

இது எந்த நடிகைக்கும் கிடைத்திராத அபூர்வ வாய்ப்பு.

இப்போது 93 வயதாகும் சரோஜா, சென்னையில் மகனுடன் வசித்து வருகிறார்.

’கூண்டுக்கிளி’ அனுபவத்தைக் குதூகலத்துடன் பகிர்ந்து கொள்கிறார், பிஎஸ்.சரோஜா.

‘’ கூண்டுக்கிளியை டைரக்ட் செய்த டி.ஆர்.ராமண்ணா எனது கணவர்.

எம்.ஜி.ஆரும், சிவாஜியும் என் கணவருக்கு நெருக்கமான நண்பர்கள். ஒருவரை ஒருவர் ‘அண்ணா ‘ என்று தான் அழைத்துக்கொள்வார்கள்.

அந்த இரு மகத்தான நடிகர்களையும் தனது படத்தில் சேர்ந்து நடிக்க வைப்பது குறித்து ராமண்ணா அடிக்கடி பேசிக்கொண்டிருப்பார்.

அந்த காலத்தில் ( 1954) அவர்கள் இருவருமே பெரிய நடிகர்கள்.

இருவருடனும் பேசி கூண்டுக்கிளியில் அவர்களை நடிக்க வைத்தார். நான் ஹீரோயின்.

தங்கராஜ்( எம்.ஜி.ஆர்), அவரது மனைவி மங்களா( சரோஜா). ஜீவானந்தம் ( சிவாஜி) ஆகியோரை சுற்றி கதையை பின்னி இருந்தார், விந்தன். அவர் ஒரு சீர்திருத்தவாதி. வசனமும் அவர் தான்.

கதையில் ஒரு ட்விஸ்ட் இருக்கும். எம்.ஜி.ஆருக்கு நான் மனைவி என்றாலும், திருமணத்துக்கு முன்னர் சிவாஜி என்னை காதலித்திருப்பார். ஆனால் அந்த காதல், கை  கூடாமல் ஏமாற்றத்தில் முடிந்திருக்கும்.

எம்.ஜிஆர். மற்றும் சிவாஜியுடன்  நான் நடித்தது அதுவே முதன் முறை. அவர்களின் தொழில் பக்தியும், தோழமையும் நான் அவர்களுடன் எளிதாக நடிப்பதற்கு வசதியாக இருந்தது’’ என்று மலரும் நினைவுகளில் மூழ்கினார், பிஎஸ்.சரோஜா..

– பா.பாரதி

You may have missed