இந்தியா : நேற்று ஒரே நாளில் 10.46 லட்சம் கொரோனா பரிசோதனை

டில்லி

நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 10,46,247 கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன.

உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது.

இங்கு 82,67,623 பேர் பாதிக்கப்பட்டு 1,23,139 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

கொரோனாவுக்கு சரியான சிகிச்சை முறை மற்றும் தடுப்பு மருந்து இதுவரை கண்டறியப்படவில்லை.

இதையொட்டி பரிசோதனை, கண்டுபிடிப்பு, தனிமைப் படுத்தல் ஆகிய முறை பின்பற்றப்படுகிறது.

அவ்வகையில் இந்தியாவில் நேற்று வரை 11,17,89,350 கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன.

நேற்று ஒரே நாளில் 10,46,247 சோதனைகள் நடந்துள்ளன.