டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,25,87,921 ஆக உயர்ந்து 1,65,132 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,03,794 பேர் அதிகரித்து மொத்தம் 1,25,87,921 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 477 அதிகரித்து மொத்தம் 1,65,132 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 52,840 பேர் குணமாகி  இதுவரை 1,16,79,961 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 7,37,870 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 57,074 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 30,10,597 ஆகி உள்ளது  நேற்று 222 பேர் உயிர் இழந்து மொத்தம் 55,878 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 27,508 பேர் குணமடைந்து மொத்தம் 25,22,823 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 4,30,503 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 2,802 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 11,35,234 ஆகி உள்ளது.  இதில் நேற்று 10 பேர் உயிர் இழந்து மொத்தம் 4,669 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,173 பேர் குணமடைந்து மொத்தம் 11,02,359 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 27,891 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 4,553 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 10,15,155 ஆகி உள்ளது  இதில் நேற்று 15 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,625 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 2,060 பேர் குணமடைந்து மொத்தம் 9,63,419 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 39,092 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 1,730 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,07,676 ஆகி உள்ளது.  நேற்று 5 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 7,239 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 842 பேர் குணமடைந்து மொத்தம் 8,90,137 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 10,300 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 3,581 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,99,807 ஆகி உள்ளது  இதில் நேற்று 14 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,778 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,813 பேர் குணமடைந்து மொத்தம் 8,65,071 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 21,958 பேர் சிகிச்சையில் உள்ளனர்.