டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,10,15,863 ஆக உயர்ந்து 1,56,498 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

நேற்று இந்தியாவில் 10,493 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 1,10,15,863 ஆகி உள்ளது.  நேற்று 76 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,56,498 ஆகி உள்ளது.  நேற்று 13,230 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,07,10,483 ஆகி உள்ளது.  தற்போது 1,44,332 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 6,210 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 21,06,094 ஆகி உள்ளது  நேற்று 18 பேர் உயிர் இழந்து மொத்தம் 51,806 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 5,035 பேர் குணமடைந்து மொத்தம் 19,99,982 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 53,113 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 2,212 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 10,36,870 ஆகி உள்ளது.  இதில் நேற்று 16 பேர் உயிர் இழந்து மொத்தம் 4,106 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 5,037 பேர் குணமடைந்து மொத்தம் 9,77,012 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 55,468 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 317 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,48,466 ஆகி உள்ளது  இதில் நேற்று 5 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,299 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 287 பேர் குணமடைந்து மொத்தம் 9,30,087 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 6,061 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 41 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,89,339 ஆகி உள்ளது.   இதுவரை மொத்தம் 7,167 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 71 பேர் குணமடைந்து மொத்தம் 8,81,582 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 590 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 449 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,48,724 ஆகி உள்ளது  இதில் நேற்று 6 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,466 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 461 பேர் குணமடைந்து மொத்தம் 8,32,167 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 4,091 பேர் சிகிச்சையில் உள்ளனர்.