டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,27,99,746 ஆக உயர்ந்து 1,65,577 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,15,262 பேர் அதிகரித்து மொத்தம் 1,27,99,746 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 630 அதிகரித்து மொத்தம் 1,66,208 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 59,700 பேர் குணமாகி  இதுவரை 1,17,89,759 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 8,38,633 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 55,469 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 31,13,354 ஆகி உள்ளது  நேற்று 297 பேர் உயிர் இழந்து மொத்தம் 56,330 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 34,256 பேர் குணமடைந்து மொத்தம் 25,83,331 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 4,72,283 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 3,502 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 11,41,093 ஆகி உள்ளது.  இதில் நேற்று 14 பேர் உயிர் இழந்து மொத்தம் 4,695 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,898 பேர் குணமடைந்து மொத்தம் 11,06,123 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 29,960 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 6,150 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 10,26,584 ஆகி உள்ளது  இதில் நேற்று 39 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,696பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 3,487 பேர் குணமடைந்து மொத்தம் 9,68,762 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 45,107 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 1,941 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,10,943 ஆகி உள்ளது.  நேற்று 7 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 7,251 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 856 பேர் குணமடைந்து மொத்தம் 8,91,883 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 11,809 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 3,648 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,07,124 ஆகி உள்ளது  இதில் நேற்று 15 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,804 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,809 பேர் குணமடைந்து மொத்தம் 8,68,722 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 25,598 பேர் சிகிச்சையில் உள்ளனர்.