இந்தியாவில் நேற்று 11,563 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,11,23,619 ஆக உயர்ந்து 1,57,195 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,563 பேர் அதிகரித்து மொத்தம் 1,11,23,619 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 80 அதிகரித்து மொத்தம் 1,57,275 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 11,990 பேர் குணமாகி  இதுவரை 1,07,96,558 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 1,65,199 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 6,397 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 21,61,467 ஆகி உள்ளது  நேற்று 30 பேர் உயிர் இழந்து மொத்தம் 52,184 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 5,764 பேர் குணமடைந்து மொத்தம் 20,30,458 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 77,618 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 1,938 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 10,61,342 ஆகி உள்ளது.  இதில் நேற்று 13 பேர் உயிர் இழந்து மொத்தம் 4,211 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 3,475 பேர் குணமடைந்து மொத்தம் 10,08,972 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 47,866 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 349 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,51,600 ஆகி உள்ளது  இதில் நேற்று 5 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,336 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 324 பேர் குணமடைந்து மொத்தம் 9,33,421 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 5,824 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 58 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,89,974 ஆகி உள்ளது.   இதுவரை மொத்தம் 7,169 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 51 பேர் குணமடைந்து மொத்தம் 8,82,080 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 725 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 474 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,52,016 ஆகி உள்ளது  இதில் நேற்று 5 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,501 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 482 பேர் குணமடைந்து மொத்தம் 8,35,506 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 4,009 பேர் சிகிச்சையில் உள்ளனர்.