டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,06,68,674 ஆக உயர்ந்து 1,53,508 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

நேற்று இந்தியாவில் 13,252 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 1,06,68,674 ஆகி உள்ளது.  நேற்று 131 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,53,508 ஆகி உள்ளது.  நேற்று 13,148 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,03,29,244 ஆகி உள்ளது.  தற்போது 1,81,480 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 2,752 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 20,09,106 ஆகி உள்ளது  நேற்று 45 பேர் உயிர் இழந்து மொத்தம் 50,785 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,743 பேர் குணமடைந்து மொத்தம் 19,12,264 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 44,831 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 573 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,36,051 ஆகி உள்ளது  இதில் நேற்று 4 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,197 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 401 பேர் குணமடைந்து மொத்தம் 9,16,325 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 7,510 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 6,036 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,90,279 ஆகி உள்ளது.  இதில் நேற்று 20 பேர் உயிர் இழந்து மொத்தம் 3,608 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 5,173 பேர் குணமடைந்து மொத்தம் 8,13,550 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 72,894 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 158 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,87,010 ஆகி உள்ளது  இதுவரை மொத்தம் 7,147 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 165 பேர் குணமடைந்து மொத்தம் 8,78,387 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,476 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 569 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,34,740 ஆகி உள்ளது  இதில் நேற்று 7 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,316 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 642 பேர் குணமடைந்து மொத்தம் 8,17,520 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 4,904 பேர் சிகிச்சையில் உள்ளனர்.